Wednesday, August 29, 2012

அஸ்ஸாம் நிலையை நேரில் கண்ட பின் பாப்புலர் ஃப்ரண்டின் அறிக்கை

                           அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்ட பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கீழ் கண்ட அறிக்கை சமர்பிக்கப்படுகிறது. ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் மெளலானா உஸ்மான் பேக் ரஷாதி, எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு உறுப்பினர் மெளலானா காலித் ரஷாதி மற்றும் தன்னார்வ தொண்டு இயக்கமான ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷனின் தொண்டூழியர்களோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் நிவாரண முகாம்களுக்கு ஆகஸ்ட் 11,12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நேரடியாக சென்று பார்வையிட்ட‌ பின் வெளியிட்ட அறிக்கை வருமாறு:



அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தால் ஆயிரக்கணக்கான வங்காள மொழி பேசக்கூடிய முஸ்லிம்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் இன்று வரை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோக்ரஜார், சீரங்க், துபாரி, பொங்கைகோன் ஆகிய மாவட்டங்களில் போடோ இனத்தீவிரவாதிகளால் கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். இம்மாவட்டத்தில் வசித்து வந்த பல முஸ்லிம் குடும்பங்கள் 200 கி.மி தொலைவில் இருக்கின்ற நிவாரண முகாம்களுக்கு துரத்தி அடிக்கப்பட்டுள்ளனர்.



வங்காள மொழி பேசக்கூடிய சிறுபான்மை முஸ்லிம்களை குறிவைத்து இக்கலவரம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அன்மை காலமாகவே தொடந்து நடைபெற்று வருகிறது. போடோ இனத்தீவிரவாதிகள் மற்றும் சில இனவாத குழுக்களால் இவர்கள் தொடர் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் வங்காள தேசத்திலிருந்து ஊடுருவியவர்கள் என்ற பொய்யான காரணத்தை மேற்கோள் காட்டி இவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நியாயப்படுத்தப்படுகின்றன.

ஈவு இறக்கமின்றி பெண்கள், குழந்தைகள் என ஏராளமான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களுடைய சொத்துக்கள், வீடுகள் அபகறிக்கப்பட்டு அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான தாக்குதல்கள் நன்கு திட்டமிட்டே நடத்தப்படுகிறது. முஸ்லிம்கள் உயிருக்கு பயந்து தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய காவல்துறையினரும் கலவரக்காரர்களோடு இணைந்து செயல்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. தற்போது வழுக்கட்டாயமாக பல இடங்களில் முஸ்லிம்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் வெளியிட்ட தகவலில் படி 2,66,700 முஸ்லிம்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள்னர். நூற்றுக்கனக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்றும் ஏராளமானோரை காணவில்லை என்று அரசாங்கத்தின் அறிக்கை கூறுகிறது.

அரிசி, தால், உப்பு போன்ற பொருட்களை அரசாங்கம் நிவாரண முகாம்களுக்கு வழங்கி வருகிறது. இன்னும் பல முகாம்களில் போதிய வசதிகள் செய்துகொடுக்கபடவில்லை. கல்லூரிகளும், பள்ளிக்கூடங்களும், மதரஸாக்களுக்கும் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டு மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். கோக்ரஜார் நிவாரண முகாமில் மட்டும் 17,000 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் ஆண்கள், கற்பின் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் ஒன்றாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பல முகாம்களில் 5 வயதுக்கு உட்பட குழந்தைகள் அதிக அளவில் தங்கியிருக்கின்றனர். பாலூட்டப்பட வேண்டிய குழந்தைகளும் அதிக அளவில் இருக்கின்றனர். பல முகாம்களில் கொடுக்கப்பட்டுள்ள குடிநீர் சரியாக இல்லை.

பல முஸ்லிம் அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அஸ்ஸாம் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். டெல்லியை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ரிஹாப் இந்தியா தொண்டு நிறுவனம் 150ற்கும் மேற்பட்ட தொண்டூழியர்களை கொண்டு அஸ்ஸாம் மக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு வருகிறது. ரிஹாபின் ஊழியர்கள் ஆக்ஸ்ட் முதல் நாள் அன்றே முகாம்களுக்கு நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டு  நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கைகளை கணக்கெடுத்து அதற்கேற்ப உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொழு வலைகள், பாலிதின் பைகள், குழந்தைகளுக்கான உணவுகள், மெழுகுவர்த்திகள், வாலி, ஜக்கு, விரகுகள், துணிமணிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அதிக அளவில் தேவைபடுவதாக ரிஹாபின் ஊழியர்கள் தெரிவித்தனர்.

முதற்கட்டமாக ஆக்ஸ்ட் 4ஆம் தேதி அன்று,

60 முகாம்களுக்கு குழந்தைகளுக்கு தேவையான 300 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

900கி.கி பாலிதின் பைகள், 1000 கொசு வலைகள், 1000 மெழுகுவர்த்திகள், 1000 வாலி மற்றும் ஜக்குகள் இவை அனைத்தும் 58 முகாம்களுக்கு வழங்கப்பட்டது. 4 லாரி முழுவதும் விரகுகள், 2 லாரி முழுவதும் காய்கறிகள், 1 லாரி முழுவதும் துணிமணிகள் பல்வேறு முகாம்களுக்கு வழங்கப்பட்டன. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமையில் சென்ற குழு இவை அனைத்தையும் மேற்பார்வையிட்டது. மேலும் அவர்கள் சட்டரீதியான உதவிகளை மேற்கொள்ளவும் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஆறுதல் கூறப்பட்டது. 380 குடும்பங்களைச் சேர்ந்த 2000ற்கும் மேற்பட்டவர்கள் துபாரி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு கர்பிணி பெண் 10கி.மி தூரம் நடந்தே வந்து நிவாரண முகாமை அடைந்துள்ளார். முகாமிற்கு வந்த அடுத்த நாளே அவருக்கு குழந்தை பிறந்தது.


தங்கள் வீடுகளுக்கு அவர்கள் திரும்பி செல்ல வேண்டுமென்பதே அனைவர்களின் விருப்பமாக இருக்கிறது. அரசாங்கம் அவர்களுடைய மற்வாழ்விற்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும்.

பொங்கைகோன் மாவட்டத்திலுள்ள நிவாரண முகாமில் இருக்கும் நஜுமுதீன் என்பவர் கூறும்போது இரண்டாயிரம் நபர்கள் வசிக்கக்கூடிய தங்களது முகாமில் ஒரே ஒரு மின் விளக்கு மட்டுமே உள்ளதாகவும், போதிய மின்சாரம் இல்லையென கூறினார். அதிகளவில் மெழுகுவர்த்திகள் தங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். ஆம்புலன்ஸ் தேவை படும் சமயத்தில் சரியாக வருவதில்லை எனவும், இம்முகாமில் தங்கி இருக்கும் அனைவருக்கு இரு கழிவறைகளே உள்ளதாக கூறினார். இம்முகாமில் ஒரு குழந்தையை பார்க்கும்போது அக்குழந்தையின் நாக்கு காயமுற்று இருந்ததையும், மருத்துவ உதவியை எதிர்பார்த்தவர்களாக இருந்ததையும் காண முடிந்தது.

கவிதா நிவாரண முகாமிற்கு சென்று பார்த்தபோது அவர்களுக்கும் போதிய வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் இரு மனைவிகளின் விதவை நிலையை காண முடிந்தது. ஒரு 5 வயது குழந்தையின் தந்தை அதன் கண் முன்னரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

செய்ய வேண்டியவை:

1. சுத்தமான குடி நீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
2. விரகுகள் மற்றும் கேஸ் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.
3. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் உடைகள் வழங்கப்பட வேண்டும்.
4. குழந்தைகளுக்கு தேவையான சத்தான உணவுகள் வழங்கப்பட வேண்டும்.
5. கற்பிணி பெண்களுக்கு தேவையான உணவுகள் வழங்கப்பட வேண்டும்.
6. மருத்துவ முகாம்கள் நடத்தபட வேண்டும்.
7. சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்

மேற்கூறப்பட்ட அனைத்து உதவிகளை செய்வதின் மூலமாக நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்கள் தங்கள் சொந்த ஊருகளுக்கு திரும்புவதற்கு உதவியாக அமையும். அவர்களுக்கு உரிய பாதுகாப்பளித்து அவர்களுடைய மறுவாழ்விற்கு  உதவி செய்வது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும். அம்மாநில முதலைமைச்சர் ஆகஸ்ட் 15 தேதிக்குள் அனைவரும் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இது வரை அது நிறைவேற்றப்படவில்லை. 3 லட்சம் மக்களுக்கு உதவிகளை மேற்கொள்ள வேண்டுமென்பது சாதாரண் விஷயமல்ல. மேலும் இது முழுமையான தீர்வும் அல்ல. அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்றும் தங்களது வாழ்க்கையை தொடர வேண்டும். அதுவே இறுதி தீர்வாகும்.

அஸ்ஸாம் மக்களுக்காக உதவியர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

அஸ்ஸாம் நிவாரண நிதிக்காக ஈகைப்பெருநாளில் பாப்புலர் ஃப்ரண்ட் திரட்டிய நிதிக்கு தாராளமாக உதவி செய்த பொதுமக்கள், அனுதாபிகள் ஆகியோருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மத்திய செயலக கூட்டம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

கலவரம் பாதித்த பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில அரசு சாரா நிறுவனங்களின் மூலமாக நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்காணித்து வருகின்றது. பல்வேறு மாநிலங்களில் நிவாரண நிதிக்காக வசூலிக்கப்பட்ட தொகை அந்தந்த மாநில நிர்வாகத்தினரால் வெளியிடப்படும். மேலும் டெல்லியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட் என்ற அரசு சாரா நிறுவனத்திற்கு ரூபாய் 50 இலட்சத்தை கொடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்நிறுவனம் ஏற்கனவே அஸ்ஸாம் நிவாரணப் பணிகளில் முழுவீச்சுடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த மத்திய செயலக கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார். சமீபத்தில் அஸ்ஸாம் சென்று நிலவரங்களை நேரில் ஆய்வு செய்த வந்த தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் அது குறித்து சுருக்கமான அறிக்கையை கொடுத்ததுடன் எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகல் குறித்தும் விவரித்தார்.

ஊழலில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை!

"நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில், நடந்த முறைகேட்டுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, பா.ஜ., வலியுறுத்தி வருகிறது.

இதைக் காரணமாக வைத்து, பார்லிமென்ட் மழைக் காலக் கூட்டத் தொடரையும், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக முடக்கி வருகிறது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில், பா.ஜ., "பிளாக் மெயில்' அரசியல் நடத்துகிறது. இதுவே, அந்தக் கட்சியின் முக்கியக் கொள்கையாக இருக்கிறது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் பிரதமர் அளிக்கும் விளக்கத்தை கேட்டபிறகு முடிவு எடுக்கலாம் என பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் அகாலிதள கட்சி கூறியது. ஆனால், இவ்விவகாரத்தில் பிரதமர் தனது பதவியை ராஜிநாமா செய்யும் வரை நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்த அனுமதிக்கப் போவதில்லை என்று பாஜக உறுதியாக கூறிவிட்டது.

“நாடாளுமன்றத்தை முடக்கினால், பிரதமர் எங்கு போய் பதிலளிப்பார்? அவர் பதிலை நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். அவருக்கு பதில் சொல்ல வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அகாலிதளத் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சியான அகாலிதலின் நியாயமான கோரிக்கையை  பாரதிய ஜனதா மறுத்திருப்பதன் மூலம்  கூட்டணி முறியும் சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில் கர்நாடகாவில், சுரங்க மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரெட்டி சகோதரர்கள், பா.ஜ., தலைவர்களுக்கு பெரிய அளவில் லஞ்சம் கொடுத்துள்ளனர் என லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். "இது தொடர்பாக, பார்லிமென்ட் குழு அமைத்து, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். பார்லிமென்டில், தற்போது நடைபெற்று வரும் குழப்பங்களுக்கு, சங்கப் பரிவார் அமைப்புகளும், பா.ஜ.,வும் தான் காரணம். பார்லிமென்டை காலவரையின்றி ஒத்திவைப்பதில், எனக்கு உடன்பாடில்லை,'' என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் DMK (கருணாநிதி) + ADMK (ஜெயலலிதா). மத்தியில் பாரதிய ஜனதா + காங்கிரஸ். ஊழல் செய்வதில் ஒருவருக்கு ஒருவர் இவர்கள் சளைத்தவர்கள் இல்லை.

Monday, August 27, 2012

வதந்தி(தீ)! இந்திய உளவுத்துறை என்ன செய்கிறது?

மருதாணி வைப்பது  தொடங்கி சாம் கலவரம் வரை வதந்தி.  தும்மல் முதல்  காய்சல் வரை எது வந்தாலும் ஐ.எஸ்.ஐ. சதி என்று சொல்லி தப்பித்து கொள்கிறது நமது உளவுத்துறை.

உலகெங்கிலும் உள்ள நாடுகளின் உளவுத்துறைகள் தங்களது நாட்டை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்படும் போது இந்திய உளவுத்துறை உண்மைகளுக்கு மாற்றமாக ஒரு சார்பாக நடக்கிறது.


அசாம் கலவரம் முடிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கினர். அங்கு ரிஹாப் போன்ற தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகின்றன.


இந்நிலையில் தமிழகம், கேரளா, கர்நாடக, ஆந்திரா, மகாராஷ்டிரா  போன்ற மாநிலங்களில் வேலைசெய்து வந்த அசாம் மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பப்பட்டது. SMS  மூலம் பரப்பப்பட்ட இந்த வதந்தியால் அசாம் மாநிலத்தவர்கள் தங்களது மாநிலத்துக்கு திரும்ப பல்லாயிரக்கணக்கில் ரயில்களில் நிலையங்களில் குவிய தொடங்கினர்.

அப்படி ரயில் நிலங்களில் குவிந்த மக்களுக்கு  சிரத்தையோடு  ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உணவு பொட்டலங்கள், மற்றும் குடிநீர் வழங்கி வழியனுப்பினர். ஏன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு இந்த திடீர் அக்கறை. ரயிலில் கட்டணம் செலுத்தி பயண சீட்டு பெற்ற அவர்களுக்கு ஒருவேளை உணவு வாங்க முடியாதா?  அரசும், அதிகாரிகளும் வதந்திகளை நம்ம வேண்டாம் என்று சொல்லும்போது ஏன் இந்த கொலைவெறி வழியனுப்பு விழா.


அந்த மக்கள் அசாமில் போய் என்ன செய்வார்கள்? தங்களது பிழைப்பை கெடுத்து தங்களது மாநிலங்களுக்கு திரும்ப வைத்த கோபத்தினால் மீண்டும் கலவரம் வெடிக்க வாய்ப்புகள் உண்டு. நிலைமை இப்படி இருக்க இவர்களுக்கு உணவும், நீரும் கொடுத்து வலியனுப்பியவர்களின் எண்ணமும் அதுதான். இது குறித்து சரியான கோணத்தில் விசாரணை நடத்தாத உளவுத்துறை பழியை பாகிஸ்தான் மீது போடுவதேன்.


அதுபோல் முஸ்லிம்களின் புனித பண்டிகையான நோன்பு பெருநாளில் அவர்களது நிம்மதியை கெடுக்கும் வகையில் SMS ஒன்று பரப்பப்பட்டது. மருதாணி வைத்து கொண்டதால் பலர் இறந்ததாகவும், நிறய பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் SMS மூலம் வதந்தி பரப்பப்பட்டது. இதனால் பீதியடைந்த மருதாணி இட்டுக்கொண்ட  பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையை அணுகி
நோன்பு திருநாளின் மகிழ்ச்சி தொலைத்தனர்.

இப்படியாக வதந்தி என்கிற பெரும் நோய் இந்தியாவை ஆக்கிரமித்துள்ளது. இப்படி வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு பாகிஸ்தான் சதி என்று சொல்வது மக்களை ஏமாற்றுவதே ஆகும். கர்நாடகா மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றி கலவர சதி செய்தார்களோ அது போன்றே இந்த வதந்திகளும் திட்ட மிட்ட சதிகளே ஆகும்.


இந்த வதந்தியால் யாருக்கு லாபம் என்பதே இங்கே கவனிக்கப்பட வேண்டியது. சாதி சண்டைகளை உண்டாக்கி அதன் மூலம் ஆட்சியை பிடிக்க நினைப்பவர்கள் நமது கேவலமான அரசியல் தலைவர்கள் என்பது நாம் அறிந்ததே. அதுபோல் மதக்கலவரங்களை நடத்தி ஆதாயம் பெறுபவர்கள் யார்? என்பதை ஏன் உளவுத்துறை ஆராய மறுக்கிறது. மதக்கலவரங்களை நடத்தி மத மாச்சாரியங்களை உண்டாக்கி நாட்டை ஆள நினைப்பது யார்? 

இந்த விசயத்தில் நீண்டகாலமாக உளவுத்துறை மவுனம் காப்பதேன். உளவுத்துறை ஒரு சார்பாக செயல்படுகிறதா? அல்லது உளவுத்துறையில் சம்மந்தப்பட்டவர்கள் ஊடுருவி இருக்கிறார்களா? இதுவே நம் ஒவ்வொருவருக்கும்  இயல்பாக தோன்றும் சந்தேகங்கள்.

உண்மையின் உரைகல்லா அல்லது பொய்யின் உரைகல்லா?

அசாமில் நடந்த கலவரங்களுக்கு காரணம் வங்கதேச குடியேற்றகாரர்களே என்று தினமலர் ஒப்பாரி வைக்கிறது.

விஷம்கக்கும் தினமலரின் கட்டுரை: காங்கிரஸ் கட்சி அந்த மாநிலத்தை வெளிநாட்டவரின் சொர்க்க பூமியாக  மாற்றியுள்ளது. அசாமில் நடப்பது ஒரு திட்டமிட்ட ஆக்கிரமிப்பாகவே தோன்றுகிறது.  இந்தியாவின் மீது ஒரு அமைதியான படையெடுப்பை காங்கிரஸ் கட்சி ஊக்குவிக்கிறது.

காங்கிரஸ் அரசிடம் போதுமான அரசியல் துணிச்சல் இல்லை. வெளிநாட்டினர் நலனுக்கு ஏற்ப, சட்டத்தை காங்கிரஸ் அரசு மாற்றிக் கொண்டுள்ளது. தனது ஓட்டு வங்கியைப் பெருக்கிக் கொள்வதற்காக, வெளிநாட்டினரின் சட்ட விரோத குடியேற்றத்தை காங்கிரஸ் அனுமதிக்கிறது. 

இப்படியாக நீள்கிறது தினமலரின் விஷமம் பிடித்த பதிவு. வங்கதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் அந்த மாநிலத்தின் பூர்விக குடிகள். இவர்களை அந்நிய வந்தேறிகளாக சித்தரித்து அங்கு நடந்த கலவரத்தை நியப்படுத்துகிறது தினமலர். அத்வானி மற்றும் தினமலர் வகைராக்கல்தான் இந்த நாட்டின் வந்தேறிகள். 
                                                         *மலர்விழி*

எஸ்.டி.பி.ஐ சார்பாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

            

                            
எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக நேற்று மாலை பெரியார் அரங்கத்தில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார்.

மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். எஸ்.டி.பி.ஐ சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திமுகவின் பொருளாளர் மு.க. ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் ஏ.இ. அப்துர்ரஹ்மான் மிஸ்பாஹி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில், சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் சர்குணம், புதுச்சேரி முன்னால் எதிர்கட்சி தலைவர் நாஜிம், ஜமாத்துல் உலமா ஹிந்தின் தலைவர் மெளலானா மன்சூர் காசிஃபி, சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை தலைவர் மேலை நாசர் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர். 

பெரும் திரளான மக்கள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கு விருந்து அளிக்கப்பட்டது.


Monday, August 20, 2012

சென்னையில் எஸ்.டி.பி.ஐயினர் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்!

 அசாம் கலவரத்தையும், பிரிவினையைத் தூண்டும் பாஜக தலைவர்களை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், மியான்மரில் முஸ்லிம்களுக்கெதிராக நடந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்த ஐ.நா சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி. அப்துல் ஹமீது தலைமையில் நடைபெற்றது. 

இந்த போராட்டத்திற்கு வட சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அசாம் கலவரத்தையும், பாஜக தலைவர்களையும் மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

 இதுகுறித்து மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட அசாம் பகுதியில் அமைதியை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடி முயற்சியை மேற்கொள்ளவில்லை. இது அவர்களின் தகுதியற்ற ஆட்சி நிர்வாகத்தை வெளிக்காட்டுகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக, நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பதிலாக மதத்தின் அடிப்படையில் மக்களை கூறுபோடவே விரும்புகிறது. எனவே பாஜக பிரயோஜனமான கருத்துக்களை சொல்லட்டும் அல்லது வாய்மூடி மௌனமாக இருக்கட்டும். 

அசாம் கலவரத்தை கண்டித்து மும்பையில் ஆர்ப்பாட்டத் நடத்தியவர்கள் மீது மும்பையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. பிரதமர் வீட்டின் மீது கல்லெறிந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தாத காவல்துறை அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் நமது அண்டை நாடான மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது இனப்படுகொலை நடத்திய மியான்மர் அரசுக்கெதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் இந்தியா வாய்மூடி மௌனம் காக்கிறது. இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கை மிகவும் பலவீனமாகிவிட்டது என்பதன் அடையாளமே இது. 

மியான்மரில் அமைதியை நிலைநாட்ட, அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்புக் கொடுக்க மத்திய அரசு ஐ.நா சபையை வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கவர்னர் மாளிகை முற்றுகையிட முயன்ற 500 க்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர். 



Thursday, August 9, 2012

3 நகரங்களில் இவ்வருட சுதந்திர தின அணிவகுப்பு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர இந்தியாவின் 65வது சுதந்திர தினம் ஆகும். இந்நாளில் இந்த தேசத்தின் விடுதலைக்காக நடைபெற்ற போராட்டங்களையும், அதில் கலந்து கொண்டு நம் முன்னோர்கள் செய்த தியாகங்களையும் நினைவு கூர்வது நமது கடமையாகும்.


இந்த தேசத்தை அந்நியர்கள் அடிமைப்படுத்த முனைந்த போதும், தேசத்திற்கு பல்வேறு ஆபத்துக்கள் ஏற்பட்ட போதும் நமது முன்னோர்கள் "என்ன நடந்தால் நமக்கென்ன?" என்று இருந்திடாமல் தங்களத உடல், பொருள் அனைத்தையும் துறந்து இந்த தேசத்தை பாதுகாத்தார்கள். இந்த உணர்வுகள் மேலோங்க வேண்டிய தருணம் நம் தேசத்தின் குடி மக்களுக்கு இபோது ஏற்பட்டுள்ளது.


சுதந்திர தின நிகழ்வை மக்கள் கொண்டாட்டமாக மாற்றும் விதத்திலும், சுதந்திர உணர்வையும், கடந்த பல வருடங்களாக நாடு முழுவதும் சுதந்திர தின நிகழ்ச்சிகளையும் முக்கிய நகரங்களில் "சுதந்திர தின அணிவகுப்பையும்" பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகிறது. இந்த அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 15ல் தமிழகத்தில் மதுரை, நாகை, இளையான்குடி ஆகிய நகரங்களில் "சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி" நடைபெறும். இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கல் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Monday, August 6, 2012

லண்டன் ஒலிம்பிக்ஸ் வேகமாக பரவும் இஸ்லாம்


பிரிட்டனை சேர்ந்த இந்த அமைப்பின் செயல்திட்டங்கள் என்றுமே ஆச்சர்யத்தையும், புதுமையையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கக்கூடியவை (அல்ஹம்துலில்லாஹ்). உலக நாத்திக மாநாட்டில் கலந்துக்கொண்டு அவர்களை அசரடித்தாகட்டும், பிரபல நாத்திகர்கள் என்ற அறியப்படுபவர்களுடன் விவாதங்களில் கலந்துக்கொண்டு அவர்களை திணறடித்தாகட்டும், இவர்கள் என்றுமே ஆச்சர்யத்தை கொடுக்க தவறியதில்லை.

இப்போது மற்றுமொரு செயல்திட்டத்துடன் அதிரடியாக இறங்கிவிட்டது இஸ்லாத்தை தழுவியவர்களால் துவக்கப்பட்ட இந்த அமைப்பு. மேட்டர் இதுதான். வரும் ஆகஸ்ட் நான்காம் தேதி, இதுவரை பிரிட்டனில் இல்லாத அளவு, நூற்றுக்கணக்கான முஸ்லிம்களுடன் "வாழ்க்கை விளையாட்டு மட்டுமா? (Is life just a game?)" என்ற வாசகத்துடன் ஒலிம்பிக் கிராமத்தில் அழைப்பு பணியை மேற்கொள்ளப்போகின்றது இந்த அமைப்பு. நீங்கள் இங்கிலாந்தில் வசிப்பவரா? ஒலிம்பிக் கிராமத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களில் சிலருக்காவது இஸ்லாமை எடுத்துக்கூற விரும்புகின்றீர்களா? நீங்களும் இந்த அழைப்பு பணியில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு இங்கே பார்க்கவும்.



ஒலிம்பிக் கிராமத்திற்கு வெளியே அழைப்பு பணியில் ஈடுபட்டுள்ள IERA குழுவினர் (மஞ்சள் டீ-ஷர்ட் அணிந்திருப்பவர்கள்)

 நான்காம் தேதி நடப்பது நடக்கட்டும். அதுவரை ஏன் வெயிட் செய்யவேண்டுமென்ற நோக்கில் IERA-வின் சிலர் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கிய அன்றே களமிறங்கிவிட்டனர். மிக அருமையான இவர்களுடைய அழைப்பு பணி பொதுமக்கள், மீடியாக்கள் என்று சமூகத்தின் அனைத்து பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இலண்டன் மேயர் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு பிரசுரம் அளிக்கப்பட்ட போது...
IERA-வை பொருத்தவரை இந்த செயல்திட்டத்தில் பெண்களை அனுமதிக்கவில்லை. இது நிச்சயமாக ஆச்சர்யமான ஒன்று. மிக வீரியமான பெண்கள் அழைப்பு குழுவை கொண்டது இந்த அமைப்பு. கேம்பிரிஜ் பல்கலைகழக வளாகத்தில் செயல்படும் இவர்களின் பெண்கள் பிரிவை இதற்கு உதாரணம் கூறலாம். ஆயிரகணக்கானோர் கூடும் இடத்தில், பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக பெண்கள் பிரிவை இந்த குறிப்பிட்ட செயல்திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்று விளக்கம் கூறியிருக்கின்றது IERA.


எது எப்படியோ, இவர்கள் அழைப்பு பணியை தொடங்கிய சில நாட்களிலேயே இறைவன் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளான். இதுவரை சுமார் 10-15 சகோதர சகோதரிகள் ஒலிம்பிக் கிராமத்தில் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

பாதுகாப்பு வீரர்களுக்கு இஸ்லாமை எடுத்து கூறுதல்
"நான் முஸ்லிமாக முடியுமா?" என்று தாமாக முன்வந்து கேட்ட சகோதரியாகட்டும், கிருத்துவத்தை எடுத்து கூற வந்து முஸ்லிமான அந்த கிருத்துவ மிஷனரியாட்டும், விவாதத்திற்கு பின்னால் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட அந்த நாத்திகர்களாகட்டும் - என பல சுவாரசியமான நிகழ்வுகளுடன் அசத்தலாக சென்றுக்கொண்டிருக்கின்றது இந்த ஒலிம்பிக் அழைப்பு பணி.

உலகளவில் இஸ்லாமை எடுத்துக்கூறும் பணிகள் சமீப காலங்களாக அதிகரித்து இருக்கின்றன. அதிக அளவிலான புதிய முஸ்லிம்களையும் இப்போதெல்லாம் நட்பு வட்டாரத்தில் பார்க்க முடிகின்றது. இந்த சூழ்நிலையில் IERA எடுத்துள்ள இந்த மகத்தான பணி வெற்றி பெற இறைவனை பிரார்த்திப்போம்.


மேலும் கர்நாடகாவில் ஆட்டோ ஓட்டுனர்கள் மூலம் பார்வும் இஸ்லாம் 

1. தன் கார் பழுதடைந்ததால் ஆட்டோவுக்காக காத்திருக்கின்றார் அந்த ஹிந்து சந்நியாசி. ஆட்டோ வருகின்றது. உட்காரும்போதே அவரை ஆச்சர்யம் தொற்றிக்கொள்கின்றது. தன் கண்ணெதிரே இருந்த இஸ்லாம் குறித்த துண்டுப்பிரசுரங்களை ஆர்வமாக எடுத்து படிக்க ஆரம்பிக்கின்றார். வியப்புடன் அந்த வார்த்தைகள் அவரிடம் இருந்து வெளிப்படுகின்றன "நீங்கள் எப்படியெல்லாம் இஸ்லாமை பரப்புகின்றீர்கள் என்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றேன்".

இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு மிகுந்துவிட, அந்த ஆட்டோ ஓட்டுனரான ஹபிஸ் முஹம்மத் சாதிக்கிடம் "குர்ஆன் அர்த்தங்களின் கன்னட மொழிப்பெயர்ப்பை" அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றார்.

2. இதே போன்றே மற்றொரு நிகழ்வை விவரிக்கின்றார் மற்றொரு ஆட்டோ ஓட்டுனரான பாஷா. அன்று ஹெப்பலில் (Hebbal) இருந்து ஒரு வாடிக்கையாளரை ஏற்றிக்கொண்டு ஒரு தொலைத்தூர பயணத்திற்கு ஆயத்தமாகின்றார் பாஷா. பயணத்தின் போது அந்த ஆட்டோவில் இருந்த இஸ்லாம் குறித்த அனைத்து பிரசுரங்களையும் படித்த அந்த கஸ்டமர், தன் வீட்டு முகவரியை கொடுத்து குர்ஆன் அனுப்ப முடியுமா என்று கேட்டுக்கொள்ள பாஷாவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை.

அடுத்த நாளே குர்ஆன் அடங்கிய பரிசுப்பெட்டகத்தை அந்த கஸ்டமரின் வீட்டிற்கு சென்று கொடுக்கின்றார் பாஷா. புத்தகங்களுக்கு விலையாக ஆயிரம் ருபாய் நோட்டை எடுத்து அந்த வாடிக்கையாளர் நீட்ட நெகிழ்ச்சியுடன் கூறினார் பாஷா, "இல்லை சார். எனக்கு வேண்டாம். மறுமை நாளில் இதற்குரிய வெகுமதி எனக்கு கிடைத்தால் போதும்".


பாஷாவின் பதில் ஒரு கணம் அந்த வாடிக்கையாளரை திகைக்க வைக்க தன் ஆசையை வெளிப்படுத்தினார் பாஷா, "என்னுடைய ஒரே ஒரு வேண்டுகோள், குர்ஆனை நீங்கள் படித்து புரிந்துக்கொண்டு உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த செய்தியை ஏற்றிவைக்க வேண்டும் என்பதுதான். உங்கள் நண்பர்களுக்கும் குர்ஆனை அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் நான் இத்தகைய பரிசுப்பெட்டகத்தை கொடுக்கும் நிலை ஏற்பட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்".

3. வெள்ளரா சந்திப்பில் நிசார் அஹமது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் சற்றே கிலியூட்டக்கூடியது. அவருடைய ஆட்டோவை பின்தொடர்ந்து வந்த போலிஸ் ரோந்து வாகனம் அவரை மடக்கியது அந்த சந்திப்பில் தான்.

முகத்தில் கலவரத்துடன் என்னவோ ஏதோ என்று பயந்து விசாரிக்க சென்ற அஹமதுவிடம் அந்த ரோந்து வாகனத்தில் இருந்த போலீஸ்காரர், "எனக்கு 'இஸ்லாம் குறித்த தவறான புரிதல்கள்' என்ற புத்தகத்தை கொடுக்க முடியுமா? பாதுகாப்பு பணியில் ஒருமுறை ஈடுபட்டிருந்த போது அதனை பார்த்திருக்கின்றேன். அன்றிலிருந்து அந்த புத்தகத்தை தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்று உங்கள் ஆட்டோவில் அந்த புத்தகத்தை கண்டவுடன் உங்களை பின்தொடர ஆரம்பித்துவிட்டேன்" என்று காரணத்தை கூறினார்.


மகிழ்ச்சியுடன் அந்த புத்தகத்தை அதிகாரிக்கு பரிசளித்துவிட்டு நடையை கட்டினார் நிசார் அஹமது.

இந்த நிகழ்வுகள் உங்களில் பலருக்கு வியப்பையும், இவையெல்லாம் என்ன என்று அறியும் ஆர்வத்தையும் கொடுத்திருக்கலாம். நமக்கே இப்படியென்றால், இந்த பணியை செய்யும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எப்படியிருக்கும்?

சென்ற மாதத்தின் பிற்பகுதியில் பெங்களூர் நகரின் முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஒரு இனம் புரியாத பரபரப்பும், மகிழ்ச்சியும் தொற்றிக்கொண்டிருந்தது. சும்மாவா என்ன? இதுநாள் வரை வாடிக்கையாளர்களை ஏற்றி சென்றுக்கொண்டிருந்த அவர்களது வாகனம், இனி இறைச்செய்திகளையும் தாங்கி செல்லப்போகின்றது.


இந்த செயல்திட்டத்திற்கு பின்னால் இருப்பது "சலாம் சென்டர்" என்ற அமைப்பு. இவர்களுடைய அணுகுமுறை நிச்சயம் புதுமையானது, புரட்சிகரமானது. இஸ்லாம் குறித்த தவறான புரிதலை களையவும், இஸ்லாமை எடுத்துக் கூறவும் ஆட்டோக்களில் சிறிய அளவிலான இஸ்லாமிய நூலகத்தை அமைத்து அழைப்பு பணியை மேற்கொண்டுள்ளது இந்த அமைப்பு.


ஓட்டுனருக்கு பின்புறம், அழகாக வடிவமைக்கப்பட்ட ஸ்டாண்டில், இஸ்லாம் குறித்து பல்வேறு தலைப்புகளில் துண்டுப்பிரசுரங்கள் வைக்கப்படுகின்றன. பயணம் செய்பவர்கள் அந்த பிரசுரங்களை எடுத்து படிக்குமாறு ஊக்கப்படுத்தப்படுகின்றார்கள். இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ள விரும்புபவர்கள் தங்கள் முகவரியை கொடுப்பதின் மூலம் குர்ஆன், நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை விளக்கும் ஒரு புத்தகம் ஆகியவை அடங்கிய பரிசுப்பெட்டகத்தை பெற்றுக்கொள்ளலாம்.



ஒவ்வொரு மாதமும் ஆட்டோக்களில் வைக்கப்படும் துண்டுப்பிரசுரங்களின் தலைப்புகள் மாற்றப்படுகின்றன.

சலாம் சென்டரின் "எல்லோருக்கும் குர்ஆன்" என்ற செயல்திட்டத்தின் ஒரு பகுதியான இந்த அணுகுமுறை பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் முதல்முறையாக அறிவிக்கப்பட்ட போது, இதனை செயல்படுத்த முன்வந்தவர் நாம் மேலே பார்த்த நிசார் அஹமத் என்ற சகோதரர் தான்.


நிசார் அஹமது ஒரு அற்புதமான பட்டத்திற்கு சொந்தகாரரும் கூட. பெங்களூர் நகரின் "மிக நேர்மையான ஆட்டோ ஓட்டுனர்" என்ற விருதை மாநகர போலிஸ் கமிஷனரிடம் பெற்றவர் இவர். தன் நேர்மையான வாழ்விற்கு காரணமான இஸ்லாமை அடுத்தவருக்கும் எடுத்து சொல்லவேண்டும் என்ற ஆழ்ந்த ஈடுபாடு நிசார் அஹமதுவிடம் இருந்து தீவிரமாகவே வெளிப்பட்டது. விளைவோ, அவர் தன் நண்பர்களுக்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த, இன்று சுமார் 50 ஆட்டோக்கள் இறைச்செய்தியை அடுத்தவருக்கு எடுத்துக் கூறிக்கொண்டிருக்கின்றன.


ஆனால் விஷயம் இத்தோடு முடியவில்லை. வேறு பல நெகிழ்ச்சியான நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கின்றன. தன் மார்க்கத்தை அடுத்தவருக்கு எடுத்துக்கூற வேண்டிய நிலை வந்தபோது தான், இந்த ஆட்டோ ஒட்டுனர்களில் சிலர் தங்கள் மார்க்கத்தையே படிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த வகையில், தங்கள் வாடிக்கையாளர்களை விட தங்களுக்கே இந்த செயல்திட்டம் அதிகளவில் பயனளிப்பதாக கூறுகின்றனர் அவர்கள்.

"என் வாழ்க்கையை நேர்மையான முறையில் அமைத்துக்கொள்ள இந்த செயல்திட்டம் உதவுகின்றது. முன்பு என் வாடிக்கையாளர்களிடம் தவறான முறையில் நடந்துக்கொண்டதற்காக இன்று அதிகமதிகமாக வெட்கப்படுகின்றேன்" - உணர்ச்சிப்பெருக்கில் கூறுகின்றார் காதர் பாஷா என்ற ஓட்டுனர்.

இஸ்லாமை சரியாக விளங்கி இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வாழ்வை அமைத்திடவும், இவர்கள் மேற்கொண்டுள்ள இந்த அற்புதமான முயற்சி மேலும் வெற்றியடையவும் பிரார்த்தியுங்கள்.

தெரியாத சில உண்மைகள்!

இந்தியா முழுவதும் தொடர்ந்து குண்டு வெடிப்புகளை நடத்திய ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மீண்டும் நாசகார வேலைகளை செய்ய தீவிர பயிற்சி எடுத்து வருகிறது
புனேயில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பிற்கும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  புனே தொடர் குண்டுவெடிப்பில் சைக்கிள் குண்டில் வெடிப்பொருளாக அம்மோனியம் நைட்ரேட் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. 
 
பொதுவாக, ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புகள்தாம் அம்மோனியம் நைட்ரேட்டை பயன்படுத்தி குண்டுகளை தயாரித்து வந்துள்ளனர்.  மலேகானில் 2006-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பிலும்  இதே பாணி கடைப்பிடிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பயங்கரவாத முகம்: சுதந்திரத்திற்கு பின்பு ஹிந்து முஸ்லிம் கலவரங்களை உண்டாக்கி இந்தியா பாக்கிஸ்தான் என்று பிரிய காரணமாக இருந்தனர். தேசத்தந்தை அண்ணல் காந்தியை கொன்றனர். 

நெல்லி, பாகல்பூர், பீவாண்டி, மும்பை, குஜராத், ஒரிசா, கோவை போன்ற கலவரங்களை நடத்தி சிறுபான்மை மக்களை கொன்று குவித்தனர். அது போதாது என்று இந்தியா முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி அந்த பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தி அவர்களை குற்றப்பரம்பரை ஆக்கினார்கள். 

சேது சமுத்திர திட்டம் முதல் அணுவுலை எதிர்ப்பு போராட்டங்கள் வரை மக்களின் அடிப்படை நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இப்படி பட்ட ஒரு நாசகார இயக்கமாகிய ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் கிளை அமைப்புகளை தடை செய்யவேண்டும் என்பதே நடுநிலை பேணும் ஒவ்வொரு ஹிந்துக்களின் எண்ணமாகும் இதை உடனே இந்திய அரசு செய்யுமா? 
                                                            *மலர்விழி*