Saturday, May 26, 2012

பா.ஜ.கவில் உட்கட்சி பூசல் தீவிரம்

பா.ஜ.கவில் உள்கட்சி பூசல் வலுத்து வருகிறது. சஞ்சய் ஜோஷி தேசிய செயற்குழுவில் இருந்து ராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானியும், சுஷ்மா சுவராஜும் நேற்று நடந்த பா.ஜ.கவின் பேரணியில் கலந்துக் கொள்ளாமல் புறக்கணித்தனர்.

இரண்டு தினங்களாக நடைபெற்ற பா.ஜ.கவின் தேசிய செயற்குழு கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற பேரணியில் இருவரும் கலந்துகொள்ளவில்லை. இச்சம்பவம் கட்சிக்கு உள்ளே நடக்கும் கடும் பூசலை வெளிப்படுத்தியுள்ளது.

பா.ஜ.கவின் தேசிய தலைவர் நிதின் கட்கரிக்கு பதவியில் தொடர கட்சி சட்டத் திட்டங்களில் திருத்தம் செய்வதற்காக செயற்குழு கூடியது. கட்கரி மீண்டும் தலைவராவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அத்வானியும், சுஷ்மாவும் பேரணியில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர் என கூறப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ்ஸும், குஜராத்தின் மோடியும் பா.ஜ.கவில் தங்களது செல்வாக்கை நிலைநாட்டியதையே இச்சம்பவம் எடுத்தியம்புகிறது.
ஜார்க்கண்ட் மாநில ராஜ்யசபா தேர்தல் விவகாரத்தில் அத்வானி, அருண்ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், யஷ்வந் சின்ஹா ஆகியோர் கட்கரியின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இதற்குப் பின்னர் தேசிய செயற்குழுக் கூட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. மோடியின் எதிரியான சஞ்சய் ஜோஷிக்கு மீண்டும் கட்சிப் பொறுப்பு கொடுத்ததால் செயற்குழுவைப் புறக்கணிக்கப் போவதாக மோடி கூறியிருந்தார். வேறுவழியில்லாமல் சஞ்சய் ஜோஷியை ராஜினா செய்ய வைத்து மோடியை தேசிய செயற்குழுவில் பங்கேற்க வைத்தனர். இதேபோல் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் போர்க்கொடி தூக்கியிருந்தார். அவரும் தேசிய செயற்குழுவைப் புறக்கணிப்பேன் என்று கூறியிருந்தார். பின்னர் மோடியைப் பின்பற்றி இன்று அவர் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் கட்கரிக்கு 2-வது முறையாக தலைவர் பொறுப்பு வழங்கப்பட்ட விவகாரம் பெரும் பிரச்சனையை உருவாக்கியுள்ளது. பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.தான் கட்கரியை மீண்டும் தலைவராக்கியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் இந்த ஆதிக்கத்தை மூத்த தலைவரான அத்வானியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கட்சிக்குள் கோஷ்டி பூசலை வளர்த்துவிடும் கட்கரிக்கு எப்படி மீண்டும் தலைவர் பதவி தரலாம் என்பது அத்வானி தரப்பின் கேள்வி. இதைத் தொடர்ந்து தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் நேற்று மாலை மும்பையில் நடைபெற்ற பாஜகவின் பேரணியை அத்வானி புறக்கணித்துவிட்டார்.

இதனிடையே, பா.ஜ.கவில் தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும், இதனை சீர்செய்யாவிட்டால் மக்கள் நிராசையடைந்துவிடுவார்கள் என்று அத்வானி கூறுகிறார்.

ஆக மொத்தத்தில் பா.ஜ.க என்பது அதிகாரப் போட்டி மிகுந்த சுயநல தலைவர்களை கொண்ட கட்சி என்பது தொடர்ந்து நிரூபணமாகி வருகிறது. இத்தகைய கேடுகெட்ட கட்சியின் எதிர்காலத்தை பிரகாசமாக்க காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு அரசின் மக்கள் விரோத ஆட்சி உதவி விடுமோ? என்ற அச்சமும் நடுநிலையாளர்களிடையே எழுந்துள்ளது.

கத்தரில் தேஜஸ் நாளிதழின் பதிப்பு துவக்கம்!

தோஹா:உலக நாடுகளில் வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் கத்தரின் காலைப் பொழுதை அலங்கரிக்க மலையாள நாளிதழான தேஜஸ் தனது பதிப்பை துவக்கியுள்ளது. மலையாளிகளின் பத்திரிகை வாசிப்பில் மாற்றத்தைக் கொண்டுவந்த தேஜஸ் வளர்ச்சியை நோக்கி பீடு நடைபோடுவதன் வெளிப்பாடே கத்தரின் புதிய பதிப்பு உணர்த்துகிறது.

கத்தரின் அரசு பிரதிநிதிகள், வர்த்தக பிரமுகர்கள், வாசகர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் கல்ஃப் தேஜஸின் நான்காவது பதிப்பின் வெளியீடு துவக்கப்பட்டது.
 
தோஹா நகரின் தாரிக் இப்னு ஸியாத் இண்டிபெண்டண்ட் ஸ்கூலில் அரங்கு நிறைந்து காணப்பட்ட அவையில் கத்தரின் கலை-கலாச்சார துறை அமைச்சரின் ஆலோசகர் பேராசிரியர் மூஸா ஸைனல் கத்தர் தேஜஸ் பதிப்பின் வெளியீட்டை துவக்கி வைத்தார்.
கத்தர்-இந்தியா இடையேயான ஆழமான வரலாற்று மற்றும் கலாச்சார உறவை வலுப்படுத்தும் அடிக்கல்லாக மாற தேஜஸிற்கு சாத்தியமாகட்டும் என அவர் தனது உரையில் வாழ்த்து தெரிவித்தார்.
கத்தர் தேஜஸ் பதிப்பின் முதல் பிரதியை அல்ஜஸீரா சேனல் கரஸ்பாண்டண்ட் தய்ஸீர் அலூனிக்கு தேஜஸ் நாளிதழின் முன்னாள் மேனேஜிங் இயக்குநரும், எஸ்.டி.பி.ஐ தேசிய தலைவருமான இ.அபூபக்கர் ஸாஹிப் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியர் பி.கோயா தலைமை வகித்தார்.
பல்வேறு சமூக ஆர்வலர்கள், வர்த்தக பிரமுகர்கள், ஊடக வல்லுநர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
 

Monday, May 14, 2012

யா அல்லாஹ் இந்த தாயின் நிலை உலகில் யாருக்கும் வராமல் இருக்க உன்னிடம் துவா செய்கிறேன்

அஸ்ஸலாமு அலைக்கும் ,

எனது பெயர் ஜீனத் வயது 60 / 2008 , எனது கணவர் பெயர் ஜான் பாட்சா , எனது மூத்த மகனும் , மகளும் திருமணமாகி தனிக்குடித்தனம் சென்று விட்டனர் , எங்களின் கடைக்குட்டி இளைய மகன் ஆஜம் தனது 19 ஆவது வயதில் 1998 ஆம் ஆண்டில் நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து இன்று வரை விடுதலை கிடைத்திடாமல் சிறையில் இருந்து வருகிறான் .

அவனது நீண்டகால சிறைவாசத்தால் மனம் நொந்து போன எனது கணவர் ஜான் பாட்சா 2004 ஆம் ஆண்டில் இறந்து போனார் (இன்னா லில்லாஹி ) எனது துன்பகளுக்கு துணையாய் அறுதல் அளித்து வந்த கணவரும் இறந்து விட்டதால் , சிறையில் உள்ள எனது மகனின் பிரிவு என்னை அதிகம் வாட்ட தொடங்கியது அதனால் சிறைக்கு சென்று அடிக்கடி மகனை தூரத்தில் நின்றாவது பார்த்து வருவேன் , இது எனக்கும் எனது மகனுக்கும் சற்று ஆறுதலை தந்தது , அதுவும் சில காலம் தான் எனது பார்வை குறைபாடலும் உடல் நோய்களாலும் படுத்த படுக்கை ஆனேன் உடல் நிலைமை மிகவும் மோசமாகி 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோவை அரசு மருத்தவ கல்லுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன் , இந்த படுக்கை தான் இவ்வுலகில் இறுதி படுக்கையாகிறது என்பதை உணர தொடங்கினேன் மன்னரை செல்லும் முன் சிறையில் உள்ள மகனை ஒரு முறையாவது காண்பேனோ என்று தவித்து கொண்டிருந்தேன் என் மகனோடு சில மணி நேரம் கூட இவ்வுலகில் வாழ முடியாமல் எனக்குரிய மரணத்தின் நேரம் என்னை பற்றி கொண்டது (இன்னா லில்லாஹி ) ...........

14 வருடங்களை அடிமை சிறையில் வாழும் எனது மகன் தந்தையையும் , தாயையும் இழந்து அநாதையாய் சிறையில் எப்படி தவிப்பானோ !?

யா அல்லாஹ் ! எனது மகனோடு நாளை மறுமையில் சுவனத்தில் ஒன்று சேர்பாயாக , இந்த நிலை தமிழக சிறையில் உள்ள எவருக்கும் ஏற்படாமல் காப்பாயாக!

மேல் உள்ள படத்தில் உள்ளவர் தான் ஜீனத்(ஜனாஸாவாக ) அருகில் உள்ளவர் தான் சிறைவாசி ஆஜம் ........

 சகோதரா ! சகோதிரிகளே ! நீங்களும் இவர்களுக்கு வேண்டி துஆ செய்வீர்களாக ....

தமிழக போலீசின் முஸ்லிம் வேட்டை: பாப்புலர் ஃப்ரண்டின் மனு உயர்நீதிமன்றத்தில் ஏற்பு!

மதுரை:வீரியம் குறைந்த ஒரு குண்டுவெடிப்பின் பெயரால் தமிழக போலீஸ் மதுரை மற்றும் அதன் சமீப பகுதிகளில் நடத்திவரும் முஸ்லிம் வேட்டைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இம்மனு மீதான விசாரணை இம்மாதம் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மதுரை அண்ணாநகர் அருகில் உள்ள கோயில் அருகே சைக்கிளில் வைக்கபட்டிருந்த வீரியம் குறைந்த குண்டு ஒன்று அண்மையில் வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அத்வானி உள்ளிட்ட சங்க்பரிவார தலைவர்கள் பா.ஜ.க மாநாட்டில் கலந்துகொள்ள தமிழம் வருவதை தொடர்புபடுத்தி ஒரு பிரிவு ஊடகங்களும், போலீசாரும் முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து அவதூறு பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டதோடு, முஸ்லிம்களின் வீடுகளில் போலீஸ் நுழைந்து அவ்வீடுகளில் இருப்போரை பீதிவயப்படுத்தி வருகிறது. இந்த அராஜக நடவடிக்கைகளுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
 
இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீடியா மற்றும் போலீசாரின் முஸ்லிம் வேட்டைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்தது.

அபுதாபியில் நடைபெற்ற “கல்வியின் மூலம் சக்திப்படுத்துதல்” கலந்துரையாடல் நிகழ்ச்சி

அபுதாபி:Emirates India Fraternity Forum (EIFF) ஏற்பாடு செய்திருந்த “கல்வியின் மூலம் சக்திப்படுத்துதல்” (Empowerment Through Education) என்ற கலந்துரையாடல் (TABLE TALK) நிகழ்ச்சி கடந்த 12-ம் தேதி சனிக்கிழமை அன்று அமீரகத் தலைநகரமான அபுதாபியில் சிறப்பாக நடைபெற்றது.

சரியாக மாலை 7.45 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. ஆரம்பமாக அருள்மறை வசனங்களை ஓதினார் சகோ. ஜுனைத் அவர்கள். அதன் பின்னர் சகோ. முனவ்வர் அவர்கள் அனைவரையும் வரவேற்றதோடு நிகழ்ச்சியைத் தொகுத்தும் வழங்கினார்.

பின்னர் “இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்” நூலாசிரியர் சகோ. எம்.எஸ். அப்துல் ஹமீது  அவர்கள் கலந்துரையாடலின் மையக்கருத்தைப் பற்றிய அறிமுகவுரையை நிகழ்த்தி நிகழ்ச்சியை இனிதே துவக்கி வைத்தார். இஸ்லாம் கல்விக்குக் கொடுத்துள்ள முக்கியத்துவம் குறித்தும், பண்டைய முஸ்லிம்கள் கல்வியில் சிறந்து விளங்கியது குறித்தும், தற்போதைய சமுதாயம் கல்வியில் பின்தங்கியுள்ள அவல நிலை குறித்தும் அவர் தனது அறிமுகவுரையில் குறிப்பிட்டார்.

பின்னர் தொகுப்பாளர் சகோ. முனவ்வர் அவர்கள் அமீரகத்தில் நல்ல பல சமூகப் பணிகளை ஆற்றி வரும் EIFFன் பணிகள் குறித்த ஒரு பார்வையை வழங்கினார்.

அதன் பின்னர் மனம் திறந்த கலந்துரையாடல் ஆரம்பமானது. முஸ்லிம் சமுதாயத்தை கல்வி ரீதியாக முன்னேற்றுவதற்கு என்னென்ன செய்யலாம், அதற்கு தாங்கள் எந்தெந்த வழிகளில் உதவ முடியும் என்ற அடிப்படையில் ஆக்கபூர்வமான பல கருத்துகள் முன் வைக்கப்பட்டன.  கலந்து கொண்ட அனைவரும் தங்களுடைய கருத்துகளை தெளிவாக பதிவு செய்தனர்.
இறுதியாக,  பத்திரிகையாளர்  சகோ. அ. செய்யது அலீ அவர்கள் இருட்டில் மறைந்து போன நம் சமுதாயத்தினரின் கல்வியை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது பற்றிய வழிமுறைகளை பல வரலாற்றுக் குறிப்புகளுடன் கோடிட்டு நிறைவுரை ஆற்றினார்.

அபுதாபியில் பணியாற்றும் பொறியாளர்கள், சாப்ட்வேர் தொழில்நுட்பவியலாளர்கள், வணிகர்கள், சார்ட்டட் அக்கவுண்டண்ட் நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் இதில் கலந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

Saturday, May 12, 2012

டெரரிஸ்டுகள் அல்ல மாவோயிஸ்டுகள்!

சென்னை: பயங்கரவாதம் என்பது தேசம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் முக்கியமானதொன்றாகும். காரணம் பயங்கரவாத தாக்குதல்களினால் எண்ணெற்ற உயிர் சேதங்கள், பொருட்சேதங்களும் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் இந்த பயங்கரவாத தாக்குதல்கள் ஒரு வித பீதியை ஏற்படுத்தியுள்ளது என கூறலாம்.

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்துவதற்கு சங்கப்பரிவார ஃபாசிஸ்டு தீவிரவாதிகளை விட கொரூரமானவர்கள் உண்டு என்றால் அது கம்யூனிஸ தீவிரவாதமான மாவோயிஸ்டுகள் தான். முக்கிய பிரமுகர்களை கடத்தி கொல்வது, காவல்துறை அதிகாரிகளை கொலை செய்வது, காவல் நிலையங்களுக்கு தீ வைப்பது, பொதுமக்கள் பயணம் செய்யும் இரயில் வண்டிகளுக்கு குண்டு வைத்து கவிழ்த்து ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறார்கள் மாவோயிஸ்டுகள்.

இந்தியவில் இவர்கள் உருவான காலகட்டத்திலிருந்து இன்றுவரை இவர்கள் செய்த பயங்கரவாத செயல்களை பட்டியலிட தொடங்கினால் எழுதி முடிக்கவியலாது. அந்தளவிற்கு இவர்களது தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் மிகப்பெரும் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் இவர்களை தீவிரவாதிகள் என்றோ, பயங்கரவாதிகள் என்றோ அரசாங்கமும், ஊடகங்களும் குறிப்பிடுவதே இல்லை மாறாக இவர்களை மாவோயிஸ்டுகள் என்று தான் பெரும்பாலும் கூறி வருகிறது.

முஸ்லிம்கள் என்று வரும் பட்சத்தில் சட்டைப்பையில் பிளேடு வைத்திருந்தாலும் கூட அவனை தீவிரவாதியாகவும், பயங்கரவாதியாகவும் சித்தரிக்கிறது இன்றைய ஊடகங்கள். ஏன் இந்த இரட்டை நிலைபாடு? என்று திருந்தப்போகிறதோ இந்த ஊடக உலகம்?


ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை

இந்தியா முழுவதும் ஜாதிவாரியாக மக்கள்தொகை எண்ணிக்கையை வைத்துத்தான் இடஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளையும் அரசு சமூகங்களுக்கு வழங்கி வருகின்றது. 2001-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் முஸ்லீம்கள் 13.4 சதவிகிதமும், தமிழகத்தில் முஸ்லீம்கள் 5.6 சதவிகிதமும் வாழ்ந்து வருவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. ஆனால் அப்போதே பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்களின் எண்ணிக்கையை இக்கணக்கெடுப்பில் சேர்க்காமல் விட்டுவிட்டனர்.

எனவே தற்போது நடைபெறும் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். இதில் அனைத்து முஸ்லீம்களின் பெயரும் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வெண்டும்.

இஸ்லாத்தில் சாதிய பிரிவுகல் இல்லை, இஸ்லாம் சாதிய நடைமுறைகளை தகர்த்தெறிந்த மார்க்கம் என்றாலும் நாம் வாழும் இந்திய சூழலில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்றவாறு அரசு வகைப்படுத்தியுள்ள கீழ்காணும் ஏதேனும் ஒன்றை நாம் குறிப்பிட்டாக வேண்டும்.

கணக்கெடுப்பின் போது மதம் என்ற கேள்விக்கு "இஸ்லாம்" என்று குறிப்பிட வேண்டும். இஸ்லாத்தில் ஜாதிய பிரிவுகள் இல்லை என்றாலும் தமிழகத்தில் லெப்பை (தமிழ், உருது பேசக்கூடிய ராவுத்தர், மரைக்காயர்), தக்னி (உருது பேசுவோர்), தூதே குலா (தெலுங்கு பேசுவோர்), மாப்பிள்ளை (மலையாளம் பேசுவோர்), அன்சர், சையத், ஷேக் என 7 பிரிவுகளாக அரசு வகைப்படுத்தி உள்ளது.

இதில் லெப்பை, தக்னி, தூதே குலா, மாப்பிள்ளை ஆகிய 4 பிரிவுகளும் தேசிய அளவில் உள்ள மத்திய அரசின் ஓ.பி.சி (பிற்பட்டோர் பிரிவில்) பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்த நான்கில் ஒன்றை இடம்பெறச் செய்தால் தான் மத்திய மாநில அரசுகளின் இடஒதுக்கீட்டுச் சலுகையை பெறமுடியும். எனவே சாதி என்ற கேள்விக்கு லெப்பை, தக்னி, தூதே குலா, மாப்பிள்ளை ஆகிய நான்கில் ஒன்றை பதிவு செய்ய வேண்டும்.

இது நமது எதிர்காலம் சம்பந்தப்ப்ட்ட விஷயமாகும். எனவே ஒவ்வொரு முஸ்லீமின் பெயரும் சேர்க்கப்பட வேண்டும்.

இந்த தகவலை தங்களுடைய பள்ளி ஜும்-ஆவில்  அறிவிப்பு செய்து நம் சமூக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என  ஜமாத்தின் அனைத்து நிர்வாகிகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு:

கணக்கெடுப்பு வரும் நபர்களிடம் முஸ்லீம் என்று மட்டும் கூறுவது நல்லது. எந்த ஜாதியையும் சொல்ல வேண்டாம் என ஜமாத்தாருக்கு தெரியப்படுத்தவும், ஏனெனில் முஸ்லீம்களின் வழக்கத்தில் இல்லாத பிரிவுகளை கூறி இடஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளும் தேசிய அளவில் மறுக்கப்பட்டு வருகின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்படிக்கு,

A.ஹாலித் முஹம்மத்,
மாநில பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு

Tuesday, May 8, 2012

மதுரை சைக்கிள் குண்டுவெடிப்பு: காவல்துறையின் ஒருதலைபட்ச விசாரணை – முஸ்லிம் அமைப்புகள் ஆட்சியரிடம் மனு!

மதுரை:கடந்த வாரம் மதுரையில் சைக்கிள் குண்டு வெடித்ததையடுத்து குற்றவாளிகள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தங்கள் பகுதிக்கு வந்து விசாரணை என்ற பெயரில் போலீஸார் அத்துமீறுகின்றனர் என்றும், இதனால் அக்கம் பக்கம் வசிப்பவர்கள் தங்களைத் தவறாக நினைப்பதாகவும், போலீஸார் ஊடகங்களுக்கு தேவையற்ற செய்திகளைப் பரப்புவதாகவும் கூறி, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா தலைமையிலான முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்றனர். அங்கு ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அலி அக்பரிடம் தங்கள் மனுவைக் கொடுத்தனர்.

நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் மற்றும் கலவரம் ஆகியவற்றில் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்களின் சதி திட்டங்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற இக்குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஏதேனும் சதிச்செயல் உள்ளதா என்பதை காவல்துறை தனது ஒருதலைப்பட்ச விசாரணையிலிருந்து வெளிவந்து நேர்மையான விசாரணை செய்தால் மட்டுமே கண்டறிய இயலும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Wednesday, May 2, 2012

முதலாளிகளுக்கு நன்றியோடு வாலாட்டும் அரசு இயந்திரங்கள்!


 இந்திய குடிமக்களில் 65 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள். 

இந்த விடயத்தை நேசனல் சாம்பிள் சர்வேயின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த சர்வேயின் அடிப்படையில் ஒரு இந்திய குடிமகனுக்கு நகரங்களில் அன்றாட வாழ்க்கைக்கு தேவை ரூ.66.10 ஆகும். கிராமங்களில் 35.10  ரூபாய் ஆகும். 

இதன் அடிப்படையில் ஒருவருக்கு ஒரு மாதம் நகரங்களில்1984 ரூபாயும், கிராமங்களில் 1054 ரூபாயும் அன்றாட அடிப்படைச் செலவு ஆகும்.

இந்த தொகை மிகவும் குறைவானது என்பது உங்களுக்கு தெரியும். நாட்டின் மொத்த மக்கள் தொகையான 120 கோடியில் 65 சதவீத மக்களுக்கும் இத்தொகை வருமானமாக கிடைப்பதில்லை. 

நிலைமை இப்படி இருக்க மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தாது பணக்காரர்களின், அந்நிய முதலாளிகளின் வருமானத்தை உயர்த்த அணு உலைகளை இந்தியா முழுவதும் துறந்து வருகிறது மண்ணு மோகன் அரசு. 

இந்தியா முழுவதும் 2035 க்குள் 80 அணு உலைகளை திறந்தே தீருவோம் என்று இந்திய அணு சக்தி துறை துரித கதியில் செயல்பட்டு வருகின்றது. பணக்காரர்களுக்கு, முதலாளிகளுக்கு சேவை செய்வது என்றால் அரசும் அதன் இயந்திரங்களும் சந்தோசமாக செயல்படுகிறது. அவர்கள் விட்டெரியும் எச்சில் பணத்துக்கு ஆசைப்பட்டு நாய்கள் போல் நன்றியோடு வால் ஆட்டுகிறது நமது இந்திய அரசு இயந்திரங்கள்.