Wednesday, November 30, 2011

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!

ஈழத்தமிலருக்காக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த தமிழகத்தின்  வீர மங்கை  செங்கொடிக்கு நினைவு இல்லம் அமைத்து திறப்பு விழா நடத்தப்பட்டது.

ஏற்கனவே தினமலர் நிருபர்
தமிழகத்தின்  வீர மங்கை செங்கொடி அவர்களை பற்றி அவதூறான செய்தி வெளியிட்டதால் அதற்கு தக்க பதில் தரும் விதத்தில் இந்த நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்த, "தினமலர்' நிருபர் மணவாளனை, காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தினர் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

"தினமலர்' நிருபர் மீதான தாக்குதல், மனிதாபிமானமற்ற செயல். தாக்கியோர் மீது
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்று தினமலர் ஓலம் இடுகின்றது. இதே தினமலர்தான் சரத்பவாரை தாக்கியவரை ஆதரித்து  ஹிந்துத்துவா அமைப்பு ஒன்று 11 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக கொடுத்ததை ஆதரித்து செய்தி போட்டது.

தமிழர்களின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை.
  அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா?  கூடங்குளத்தில் நடக்கும் மக்கள் போராட்டத்தை திரித்து கொச்சைபடுத்தியது போதாதா?

தமிழர்கள் விழித்து கொண்டார்கள் துரோகிகளை அடையாளம் கண்டுள்ளார்கள்.
வரலாறு திரும்பும் துரோகிகள் பாடம் பெறுவர்.  இந்த ஒரு இடத்தில் மட்டும் இல்லை போகும் இடமெல்லாம் தினமலரை மக்கள் துரத்தி அடிக்கவேண்டும். மக்கள் நலனில் அக்கறை இல்லாத பாசிச  சிந்தனை படைத்த தினமலர் மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டும். தினமலர் ஆரம்பிக்கப்பட்டது முதல் தமிழர்களுக்கு எதிராவவே செய்தி வெளியிட்டு வந்துள்ளது.

ஈழத்து மக்களின் சுதந்திர போராட்டத்தை கொச்சைபடுத்தியது முதல் தமிழக மீனவர்கள் பிரைச்சனை, கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த பிரச்சனை இப்படி எல்லா மக்கள் பிரச்சனைக்கும் எதிராகவே தினமலர் செய்தி வெளியிட்டு வந்துள்ளது.
தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டு ஒருபோதும் செய்தி வெளியிட்டதில்லை. ஹிந்துத்துவா இயக்கங்களின், பார்ப்பனியத்தின், வர்ணாசிரம கொள்கையின் ஊதுகுழலாகவே  செயல்படும் தினமலரை மக்கள் தமிழகத்தை விட்டே துரத்தி அடிக்க வேண்டும். மக்கள் விரோத பத்திரிக்கையான தினமலருக்கு எதிரான தாக்குதல்கள் தொடரவேண்டும். இதுவே நியாயவான்களின் வேண்டுகோள்.
*மலர்விழி* 

Sunday, November 27, 2011

சங்க்பரிவார்கள் நடத்திய குண்டுவெடிப்புகள் சமூகங்களை பிளவுப்படுத்தியுள்ளது – சுரேஷ் கெய்ர்னார்

 புதுடெல்லி:சங்க்பரிவாரம் நடத்திய குண்டுவெடிப்புகள் முஸ்லிம்களை பாதுகாப்பு அற்றவர்களாகவும், பீதிவயப்படுபவர்களாகவும் மாற்றியது மட்டுமல்ல, சாதாரண ஹிந்து-முஸ்லிம் மக்களிடையே ஆபத்தான பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது என அகில இந்திய தேசிய மதசார்பற்ற பேரவையின் தேசிய கன்வீனர் டாக்டர்.சுரேஷ் கெய்ர்னார் கூறியுள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா டெல்லியில் நடத்திவரும் சமூக நீதி மாநாட்டில் ’நீதிக்கான மக்களின் உரிமை’ என்ற கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது: ‘அரசின் அனைத்து துறைகளும் முஸ்லிம்களுக்கு அநீதியை காட்டுகின்றன. கல்வி கற்ற மாணவர்களுக்கு தங்களுடைய கல்வி தகுதியே பெரும் தலைவலியாக மாறும் அளவிற்கு இந்தியாவின் புலனாய்வு ஏஜன்சிகள் நடந்துகொள்கின்றன.

அஸிமானந்தா என்ற குற்றவாளி பல வருடங்களுக்கு பிறகு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோது அதனை கொண்டாட இங்கே ஆட்கள் உள்ளனர். ஆனால், மனித உரிமை ஆர்வலர்கள் இந்த உண்மைகளை பத்து ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டனர். இந்தியாவில் நடந்த எந்த குண்டுவெடிப்பிலும் ஒரு முஸ்லிமுக்கும் பங்கில்லை.’ இவ்வாறு கெய்ர்னார் கூறினார்.

அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை ஏமாற்றுகின்றன – ஃபதேஹ்பூர் ஷாஹி இமாம்

புதுடெல்லி:முஸ்லிம்களின் மோசமான சூழ்நிலையை சச்சார் கமிட்டி சுட்டிக்காட்டிய பிறகும் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை ஏமாற்றுவது தொடர்கிறது என டெல்லி ஃபதேஹ்பூரி ஷாஹி இமாம் முஃப்தி முஹம்மது முகர்ரம் அஹ்மத் கூறியுள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சமூக நீதி மாநாட்டையொட்டி நடைபெற்ற மில்லி கன்வென்சனை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியதாவது:

சச்சார், ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் அறிக்கைகளை தற்பொழுதும் மேசைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் வழிப்பாட்டு உரிமை கூட சவாலை சந்தித்துக்கொண்டிருக்கிறது. பலரும் முஸ்லிம்களின் பிரச்சனைகளை கேட்க கூட தயாரில்லை. முஸ்லிம்களை ஏமாற்றுவதில் எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே போலவே உள்ளன.

சமூக நீதிக்கான அழைப்பு வெறும் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல. சமூகத்தின் அனைத்து பிரிவினரும் அதன் வரம்பிற்குள் வருவர். இத்தகையதொரு சமூகநீதிக்காகத்தான் நமது தேச தந்தை மகாத்மா காந்தி சுதந்திர இந்தியாவுக்காக பாடுபட்டார். அதனால்தான் அவர் கலீஃபா உமரின் நீதியை விரும்பினார். சமூகநீதி மாநாடு முஸ்லிம்களின் துயரநிலையை மாற்றுவதற்கான முக்கியத்துவம் வாய்ந்த துவக்கமாகும். இவ்வாறு ஃபதேஹ்பூர் ஷாஹி இமாம் கூறினார்.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?

மக்களின் பரபரப்பான போராட்டங்கள், மக்கள் போராட்டத்தை ஒடுக்க தேசதுரோகம், ராணுவநடவடிக்கை என்று அரசின் மிரட்டல்கள்,  தினமலரின் தமிழர்விரோத, மக்கள்விரோத பிரசாரங்கள்  என்று நகர்கிறது கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த விடயம். கூடங்குளம் அணுமின் நிலையம் ஆபத்தானதா? இல்லையா?  பார்ப்போம்

விஞ்சான பார்வை:
மன்னார் வளைகுடா கடலின் தரைபகுதியில்  70 கிலோமீட்டர் மற்றும் 35 கிலோமீட்டர் நீளம் கொண்ட இரண்டு  உடைந்து சரியும் தன்மையைக் கொண்ட வண்டல் குவியல்கள் (slumps) உள்ளன. 1982 ஆம் ஆண்டில் வில்லியம் வெஸ்டால் மற்றும் லௌரீ என்ற இரு ஆய்வாளர்கள் இதை  கண்டுபிடித்தனர். 1994 ஆம் ஆண்டில் இந்த வண்டல் குவியல்களின் அடிப்பகுதியில் எரிமலைகள் இருப்பதும்  கண்டுபிடிக்கப்பட்டது.

ஏதாவது சிறிய நிலநடுக்கம் ஏற்ப்பட்டாலும் இந்த வண்டல் குவியல்கள் சரிந்து சுனாமி பேரலைகளை உருவாக்கும்
, அதேநேரம் அந்த மணல் திட்டுகளின் அடியில் இருக்கும் எரிமலையும் வெடிக்ககூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இந்திய அணுசக்திக் கழகம் இந்த வண்டல் குவியல்களினால் ஏற்பட உள்ள  பேரிழிவு பற்றி  ஆய்வு செய்ய  இன்றளவும் மறுத்து வருகிறது. இதுதான் கூடங்குளம் அணுமின்நிலையம் குறித்த ஒரு தெளிவான விஞ்சான பார்வை.

வரலாற்று பார்வை:
காமராஜர் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவராகவும், தமிழக முதல்வராகவும்  இருந்த காலத்தில் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். அவருக்கு பின்னால் அண்ணா, எம்.ஜி.ஆர்,  கருணாநிதி ஆட்சிகளில் மத்திய அரசால் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தது. அதனாலேயே கருணாநிதி வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று சொன்னார்.

அந்த காலகட்டங்களில் பலநல்ல திட்டங்கள் வட மாநிலங்களை  நோக்கி கொண்டு சொல்லப்பட்டன.
  அதில் ஒன்றுதான் போபால் ஆனால் போபால் விசவாய்வு கசிவால் விழித்துக்கொண்ட வட இந்தியர்கள்  இதுபோன்ற ஆபத்தை விளைவிக்கும் திட்டங்களை  தமிழகத்தை நோக்கி தள்ளிவிட்டனர். அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட்  என்கிற தாமிர உருக்கு ஆலை, மற்றும் ஆறுமுகநேரி DCW என்கிற தாரங்கதாரா கெமிக்கல் வொர்க்ஸ், போன்றவைகள் அடங்கும்.

இந்த ஆலைகளின் முதலாளிகள் குஜராத்திகள் என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம்.
உண்மைகள் இப்படி இருக்க   அணுவுலைக்கு எதிரான இந்த மாபெரும் மக்கள் போராட்டத்தை கொச்சைபடுத்தும் கீழ்த்தரமான வேலையை  தினமலர் தொடர்ந்து செய்து வருகிறது. இந்த அணுவுலை ஆபத்தானதில்லை என்று போலியான வாதங்களை முன்வைத்தும், அதே நேரம் இந்த போராட்டத்தை பற்றியும் அதை நடத்தும் மக்கள் தலைவர்களை பற்றியும் தினமலர் இழிவான செய்திகளை வெளியிட்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக அந்த போராட்டத்தின் தலைவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக ஒரு குற்றச்சாட்டையும், அதில் ஈடுபட்டுள்ள ஒரு பாதிரியாரின் சொத்து கணக்கு பற்றியும் அவர்களது வீட்டு முகவரி தொலைபேசி இலக்கங்களையும் தினமலரில் வெளியிட்டு அவர்களுக்கு ஆபத்தை உண்டாக்க திட்டமிடுகிறது.
இதே அணு உலை காஞ்சி சங்கரமடத்திற்கு அருகாமையிலோ அல்லது  ஸ்ரீரங்கத்திலோ நிருவப்படுமே ஆனால் தினமலரின் வேடம் சேதுசமுத்திர திட்டத்தில் ராமர் பாலம் என்றது போல் கலைந்திருக்கும்.

ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது  தினமலர்
. அதே நேரம் மும்பையில் தமிழர்களை, குஜராத்திகளை  ஹிந்துத்துவா சிவசேனைகாரர்கள்  அடித்து துரத்தியபோது மவுனம் காத்தது, கர்நாடகா தண்ணீர் தராதபோதும், தமிழகத்துக்கு நன்மைதரும் சேதுசமுத்திர திட்டத்தை அமுல்படுத்த தடையாக ராமர் பாலம் கதை சொல்லியும்  ஹிந்துதுவாவுக்கு ஆதரவாக செயல்பட்டது.

இவ்வளவு நாளும் மவுனம் காத்த மக்கள் இப்போது ஏன் எதிர்கிறார்கள்
ன்று தினமலர் ஒரு பொய்யான கேள்வியை முன்வைகிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கப்பட்டது முதல் மக்கள் எதிர்ப்பு என்பது இருந்தே வந்தது. விஞ்சான வளர்ச்சி அடைந்த ஜப்பானில் அணு உலையினால் ஏற்ப்பட்ட ஆபத்தை பார்த்ததும் ஜப்பானுக்கே இந்த கதியா என்று அஞ்சிய மக்களின் போராட்டம் மேலும்  வலுவடைந்தது. 

மேலும்
போபால் விசவாய்வு கசிவு நடந்து 25 ஆண்டுகளை கடந்தும் அந்த மக்களுக்கு சரியான நிவாரணம் கிடைக்கவில்லை. மேலும் ரஷ்யாவால் வடிவமைக்கப் பட்ட மற்றைய அணுவுளைகளால் ஏற்ப்பட்ட விபத்துக்கள், கூடங்குளம் பகுதி நிலநடுக்கம், மற்றும் சுனாமிக்கு வாய்ப்புள்ள பகுதி போன்ற காரணங்களே எல்லாராலும் இந்த திட்டம் வெறுக்கப்பட காரணமாக அமைந்தது.

கூடங்குளம் அணுமின் நிலையம் எவ்வளவு ஆபத்தானதோ! அதுபோல் தினமலர் என்கிற விஷ செடியும் தமிழகத்துக்கு ஆபத்தானது.
அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தோடு தினமலருக்கு எதிரான போராட்டங்களையும் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும். தினமலர் என்கிற விஷ மலரை வாங்குவதை தமிழர்கள் நிறுத்த வேண்டும். தமிழர் விரோத இந்த பத்திரிக்கையை தமிழகத்தை விட்டே துரத்த வேண்டும்.

அன்பான வாசகர்களே! கீழ்க்கண்ட தொலைபேசிக்கு தொடர்புகொண்டு கூடங்குளம் பிரச்சைக்கு நமது ஆதரவை தெரிவிப்பதோடு தினமலருக்கு எதிரான மக்கள் போராட்டத்தை நடத்த சம்மந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை வைப்போமாக.
S.P. உதயகுமார் இவரது மொபைல் எண்: 98656 83735. இவரது நாகர்கோவில் தொடர்பு எண்: 04652 2406567 இ-மெயில்: drspudayakumar@yahoo.com, spudayakumar@gmail.com.  

ஃபலஸ்தீனில் தேர்தல் நடத்த ஃபத்ஹ்-ஹமாஸ் ஒப்புதல்

கெய்ரோ: ஃபலஸ்தீனில் அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தலை நடத்துவதற்கு ஹமாஸ்-ஃபதஹ் கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளன. ஃபலஸ்தீன் ஆணைய அதிபரும், ஃபத்ஹ் கட்சியின் தலைவருமான மஹ்மூத் அப்பாஸும், ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அலும் கெய்ரோவில் நடத்திய பேச்சு வார்த்தையில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

ஃபலஸ்தீனில் இரு கட்சியினரும் இணைந்து அரசை உருவாக்குவதற்கு தீர்மானம் ஏற்பட்டுள்ளதாக மூத்த ஃபத்ஹ் கட்சி தலைவர் அறிவித்துள்ளார். மேலும் இரு கட்சிகளின் கட்டுப்பாட்டிலுள்ள இரு கட்சிகளை சார்ந்த சிறைக் கைதிகளை விடுவிக்கவும் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கட்சிகளில் கருத்து வேறுபாடுகள் நீடித்தாலும் இரு தரப்பினரும் சமமான பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வார்கள் என மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்தார்.

இதற்கிடையே ஹமாஸும், ஃபத்ஹும் ஒப்பந்த மேற்கொண்டதற்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், இந்த எதிர்ப்பை பொருட்படுத்தமாட்டோம் என காலித் மிஷ்அல் தெரிவித்துள்ளார்.

ஹமாஸும், ஃபத்ஹும் ஒப்பந்தம் மேற்கொள்வதை எதிர்ப்பதன் பொருள் ஃபலஸ்தீனிகள் ஒன்றிணைவதற்கான முக்கியத்துவத்தை நிரூபிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.அப்பாஸும், மிஷ்அலும் மீண்டும் டிசம்பர் 22-ஆம் தேதி கெய்ரோவில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஃபலஸ்தீனில் அனைத்து அமைப்பினரும் கலந்துகொள்ளும் கூட்டத்தில் ஃபலஸ்தீன் விடுதலை இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான வழிகளை குறித்து ஆராயப்படும் என இரு தலைவர்களும் கூறினர்

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு: பாராளுமன்றம் ஸ்தம்பித்தது

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கு எதிராக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் எதிர்கட்சியினருடன் இணைந்து நடத்திய எதிர்ப்பால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஸ்தம்பித்தன. தொடர்ச்சியாக நான்காவது தினமாக பாராளுமன்ற நடவடிக்கைகள் சுமூகமாக நடக்காமல் முடக்கப்பட்டன.

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையிலும், மக்களவையிலும் மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா அறிக்கை சமர்ப்பித்தார்.மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். அதேபோன்று, மக்களவையிலும் அரசின் முடிவுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநிலங்களவையில் திரிணமூல் எம்.பி.க்களுடன் இணைந்து பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சி எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
அப்போது மக்களவைத் தலைவர் இருக்கையில் இருந்த தம்பிதுரை, சபை நடவடிக்கைகளை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
மாநிலங்களவையில் ஆனந்த் சர்மாவின் அறிக்கையை மார்க்சிஸ்ட், பாஜக எம்.பி.க்கள் கிழித்து எறிந்தனர். திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கியதை அரசு வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மக்களவை ஒத்திவைக்கப்பட்ட பின் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்த மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு தொடர்பாக விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். இந்த விஷயம் தொடர்பாக முன்னதாக எதிர்க்கட்சிகளுடன் அரசு கலந்தாலோசிக்காதது ஏன்? என்று சுஷ்மா ஸ்வராஜ் அவரிடம் கேள்வி எழுப்பினார். 

திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் சுதீப் பந்தோபாத்யாய செய்தியாளர்களிடம் கூறுகையில், “கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மக்களைப் பாதிக்கும் பிரச்னைகளில் அரசுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்போம். எனினும், இதன் மூலம் கூட்டணியில் பாதிப்பு ஏற்படாது” என்றார்.

Saturday, November 26, 2011

நீதிக்காக மக்களின் உரிமைகள் - கருத்தரங்கம்

சமூக நீதி மாநாட்டின் முதல் நாள் இரண்டாம் அமர்வாக "நீதிக்காக மக்களின் உரிமைகள்" என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான், தேசிய பொருளாளர் கே.பி.ஷரீஃப். தேசிய செயற்குழு உறுப்பினரும் தேஜஸ் நாளிதழின் ஆசிரியருமான பேராசிரியர் கோயா, ஊடக தொடர்பாளர் அனீஸ் அஹமது ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் உட்பட இந்தியாவிலிருந்து பிரமுகர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்தனர். இதை பற்றி முழு செய்தி தொகுப்பு பின்னர் வெளியிடுகிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.



வலிமையை நோக்கி - கருத்தரங்கம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக நீதி மாநாட்டை சரியாக 9:30 மணி அளவில் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் பாப்புலர் ஃப்ரண்டின் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட மூவர்ணக்கொடியை ஏற்றி துவக்கி வைத்தார். மாநாட்டின் முதல் நாளான இன்று காலை 10:00 மணி அளவில் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் தலைமையில் "வலிமையை நோக்கி" என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது. தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் பாப்புலர் ஃப்ரண்டின் அழைப்பை ஏற்று பங்கெடுத்த சமூக ஆர்வளர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கருத்தரங்கத்தில் பங்கேற்றனர்.







Friday, November 25, 2011

இஷ்ரத்தை அவதூறு பரப்பிய ஜி.கே.பிள்ளை மன்னிப்பு கோரவேண்டும்

குஜராத்தில் இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு அப்பாவிகள் மோடி போலீசாரால் போலி என்கவுண்டரில் கொலைச் செய்யப்பட்டதாக சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை சமர்ப்பித்துள்ள சூழலில் பாலியல் ரீதியாக இஷ்ரத் மீது அவதூறு பரப்பிய முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை மன்னிப்பு கோரவேண்டும் என ஜாமியா டீச்சர்ஸ் சோலிடாரிட்டி தலைமையில் பிரமுகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இஷ்ரத் ஜஹான் லஷ்கர்-இ-தய்யிபா உறுப்பினர் என உச்சநீதிமன்றத்தில் அளித்த பிரமாணப்பத்திரத்தில் கூறிய ஜி.கே.பிள்ளை அவருக்கு எதிராக பாலியல் ரீதியான அவதூறையும் சுமத்தியிருந்தார். பல ஆண்களுடன் ஹோட்டலில் தங்கியிருந்தார் என இஷ்ரத்தை குறித்து அவதூறை கூறியிருந்தார் ஜி.கே.பிள்ளை.

சுதந்திரமாக பயணம் செய்யும், பணி புரியும் இளம்பெண்ணை சந்தேகத்தின் நிழலில் நிறுத்துவதற்கான முயற்சிதான் ஜி.கே.பிள்ளையின் அவதூறு என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இஷ்ரத் உள்பட நான்குபேர் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக சிறப்பு புலனாய்வு குழு கண்டிபிடித்தது. இவர்களுக்கு லஷ்கர்-இ-தய்யிபாவுடன் தொடர்பிருப்பதாக ஒரு ஆதாரம் கூட இல்லை. இந்நிலையில் இஷ்ரத்தை குறித்து அவதூறான கருத்தை தெரிவித்த ஜி.கே.பிள்ளை உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 
சுதந்திர பத்திரிகையாளர் ஜோதி புன்வானி, எழுத்தாளர் கீதா ஹரிஹரன், வரலாற்றாசிரியர் ஸபா தேவன், ஜாமியா மில்லியா இஸ்லாமியா அசோசியேட் பேராசிரியர் ஸபீனா காதியோக், பேராசிரியர் ஜானகி ராஜன், பேராசிரியர் அனுராதா ஷினோய்(ஜவஹர்லால் நேரு பல்கலை கழகம்), ஸீமா முஸ்தஃபா(பத்திரிகையாளர்), கவிதா ஸ்ரீவஸ்தவா(பி.யு.சி.எல்) ஆகியோர் ஜி.கே.பிள்ளை மன்னிப்புக்கோர வலியுறுத்தும் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்

பி.ஜே.பி. ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பது மக்களை ஏமாற்றும் வேலை

SDPI யின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி இன்று விடுத்துள்ள பத்திரிகை அறிக்கை பின்வருமாறு:-

“பாரதிய ஜனதா கட்சி ஊழலுக்கும், கருப்புப் பணத்திற்கும் எதிராக குரல் கொடுப்பதாக காட்டி நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் முடக்கி வருகிறது. இது வரும் நாடாளுமன்றத் தேர்தலை காரணமாக வைத்து நடைபெறும் ஏமாற்று வேலையே தவிர வேறில்லை.

பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் தொலை தொடர்பு துறையில் பல்லாயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இது தற்போது சி.பி.ஐ யின் விசாரணை வளையத்தில் உள்ளது. எடியூரப்பாவின் ஊழல்களால் கர்நாடகம் நாறிக் கொண்டிருக்கிறது. சவப்பெட்டி ஊழல் முதல் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க கையூட்டு பெற்றது வரை பி.ஜே.பி யினர் செய்த ஊழல்கள் எண்ணற்றவை.

பி.ஜே.பி ஆட்சி செய்த காலத்தில் கருப்பு பணத்தை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஆட்சி செய்த போது சும்மா இருந்துவிட்டு இப்போது “குய்யோ முறையோ ”என சப்தமிடுவது நாடகமே தவிர வேறில்லை.

தற்போது 12 க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்பு வழக்குகளில் சங்பரிவார்களுக்கு உள்ள தொடர்வை வெளிப்படுத்தி காவி பயங்கரவாதத்தை அம்பலப்படுத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரத்தை குறிவைத்து நாடாளுமன்றத்தை பா.ஜ.க வினர் முடக்கி வருகின்றனர். இதற்கு ஊழல் காரணமல்ல. சங்பரிவார்களின் சதியை அம்பலப்படுத்தி விட்டாரே என்ற கோபம் தான் காரணம்.

தமிழகத்திலும் பி.ஜே.பி. யினரின் நாடகம் அம்பலமாகி வருகிறது. தமிழகத்தில் பேருந்துக்கட்டணம், பால் விலை உயர்வை அறிவித்த அதிமுக அரசை எதிர்த்து போராட்டம் என அறிவித்துவிட்டு இடையில் பி.ஜே.பி க்கும் அதிமுக விற்கும் பாராளுமன்றத்தை முடக்குவதில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டதால் தமிழகத்துக்கு நிதியளிக்க மறுக்கும் “மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்” என தலைப்பை மாற்றி நாடகமாடியுள்ளனர்.

எனவே ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிரானவர்கள் என்ற முகமூடியுடன் மக்களை ஏமாற்றும் பி.ஜே.பி யை மக்கள் அடையாளம் கண்டு தகுந்த பாடத்தை தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

நேற்றைய தினம் 23.11.2011 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிற்கு ஏற்பாடு செய்திருந்தது. பிற்பகல் 12 மணி அளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்டின் உயர்மட்ட குழு தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
 
26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ராம்லீலா மைதானத்தில் நடக்க இருக்கும் சமூக நீதி மாநாடு வெற்றி பெறுவதற்காக உங்களது ஒத்துழைப்பையும், ஆதரவை எதிர்பார்க்கிறோம். அனைவரும் ஒன்றினைந்து தேசத்தை நீதியால் கட்டமைப்போம் என்று  கேட்டுக்கொள்கிறேன்.

ஊடக தொடர்பாளர்
அனீஸ் அஹமது


பத்திரிக்கையாளர்களுக்கு தேசிய தலைவர் அளித்த பேட்டியின் விபரம் வருமாறு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடைபெற விருக்கும் "சமூக நீதி மாநாடு" புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் 26 மற்றும் 27 ஆகிய தினங்களில் நடைபெறும். மாநாட்டிற்கான பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில், இந்தியாவில் இருந்து ஒவ்வொரு பகுதிகளிலிருந்தும் மக்கள் புறப்பட்டு டெல்லியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். மாநாட்டின் இறுதி நாளான 27ஆம் தேதி அன்று நடக்க விருக்கும் பொதுக்கூட்டத்திற்கும் மிகப்பெரிய அளவில் மக்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

மக்களின் உரிமைக்காகவும், நீதிக்காகவும், ஒற்றுமையுடன் பல்வேறு சமூக தலைவர்கள், அறிவுஜீவிகள், சமூக ஆர்வளர்கள் கலந்து கொள்ளக்கூடிய வகையில் இம்மாநாடு அமையும். நமது முன்னோர்கள் கனவு கண்ட "சமூக நீதி" என்பது எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும், அதற்காக மக்கள் தயாராக வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இம்மாநாட்டின் லட்சியமாகும். இன்றைய காலகட்டத்தில் நமது தேசம் பல ஆபத்துக்களை எதிர்கொண்டு வருகிறது. அவற்றில் ஊழல், மதவாத சக்திகள், காலணியாதிக்கம், தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், விவசாயிகளின் தற்கொலைகள் மற்றும் மனித உரிமைய் மீறல்கள் போன்றவை மிக ஆபத்தானதாகும். இத்தகைய நிலையில் மக்களை ஒன்று திரட்டி சமூக நீதிக்காக போராட வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது. 26ஆம் தேதி காலை 9:30 மணி அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் பாப்புலர் ஃப்ரண்டின் மூவர்ணக்கொடியை ஏற்றி மாநாட்டினை துவக்கி வைப்பார். முதல் நாளன்று இரண்டு கருத்தரங்கங்கள் நடைபெறும். இரண்டாம் நாளான 27ஆம் தேதி அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும்.

இரண்டாம் நாள் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டம் ராம்லீலா மைதானத்தில் சரியாக 1 மணிக்கு தொடங்கி 4:30 மணி அளவில் நிறைவுபெரும். பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கி நடத்தித்தருவார். அதன் பின்னர் இந்தியாவின் பிரபலங்களான முலாயம் சிங் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான், ஆஸ்கர் பெர்னான்டஸ், அஜீஸ் புர்னே, செய்யது ஷஹாபுதீன், மெளலானா முஹம்மது அஷருல் ஹக் காஸிமி, மெளலானா முஹம்மது வலி ரஹ்மானி, மஹான் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் மஹராஜ், ஈ.அபூபக்கர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கின்றனர்.

மாநாட்டின் முதல் நாளான 26ஆம் தேதி "வலிமையை நோக்கி" என்ற தலைப்பில் காலை 10.00 மணி அளவில் நடக்கவிருக்கும் மாபெரும் கருத்தரங்கத்தை ஃபதஹ்புரி மஸ்ஜிதின் தலைமை இமாம் டாக்டர். முஃப்தி முஹம்மது முகர்ரம் அஹமது தொடங்கி வைப்பார். கமால் ஃபரூக், பாபரி மஸ்ஜித் வழக்கின் வழக்கறிஞர் ஜஃபரியாப் ஜீலானி, சுஹைப் இஃக்பால், டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான், டாக்டர் அர்ஷிகான், ஏ.செய்யது, ஹாஃபிழ் மன்சூர் அலி கான் மற்றும் பலர் கலந்து கொண்டு உரை நிகழ்த்த இருக்கின்றார்கள். "நீதிக்காக மக்களின் உரிமைகள்" என்ற தலைப்பில் மதியம் 2.00 மணி அளவில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெறும். இதில் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.ஜீலானி, கவிதான் ஸ்ரீவஸ்தாவா, டாக்டர் உதித் ராஜ், டாக்டர் சம்சுல் இஸ்லாம், சுரேஷ் கயிர்னர், மற்றும் பலர் இதில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கின்றனர்.

மாநாட்டின் செய்தியையும், அதன் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் நாடக அரங்கேற்றம் மற்றும் வீடியோ காட்சிகளின் மூலமாக தலைநகர் முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பிரச்சாரங்களின் வாயிலாக‌ தேசம் சந்தித்துக்கொண்டிருக்கும் ஆபத்துக்களையும், எதிர் கொள்ள வேண்டிய சவால்களை பற்றிய விரிவான பார்வையின் அடிப்படையில் நடைபெற்றது. ஒவ்வொரு இடங்களிலும் நடைபெற்ற கருத்தரங்கங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் தெருமுனைக்கூட்டங்களின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்திருக்கின்றனர்.

அதே போன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக "நயா கதம்" (புதிய எட்டு) என்ற தலைப்பில் கண்காட்சி ஒன்றினை நடத்த இருக்கின்றது. இந்தியாவில் ஓரங்கப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்கான வெளிப்பாடினை விவரிக்கும் வகையில் இந்த கண்காட்சி நடைபெறும். நாளை மாலை (வெள்ளிக்கிழமை) சரியாக 3.00 மணி அளவில் கண்காட்சி திறந்துவைக்கப்படும். 27ஆம் தேதி இரவு 9.00மணி வரையிலும் மக்களின் பார்வைக்காக கண்காட்சி திறந்துவைக்கப்படும். சனிக்கிழமை மாலை இந்திய கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாநிலங்களிலிருந்தும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களால கலாச்சார நிகழ்ச்சியும் நடைபெறும். சமூக நல இயக்கமாக செயல்பட்டு வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இதற்கு முன்னர் 2007ஆம் ஆண்டு பெங்களூரில் வலிமையான இந்தியாவை உருவாக்க மாநாடு மற்றும் 2009ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தேசிய அரசியல் மாநாடு ஆகிய இருபெரும் நிகழ்ச்சியை நடத்தி இருக்கின்றது. இந்த இரு மாநாடுகளும் அடக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்ட சமூகங்களின் விடுதலைக்காக போராட வேண்டும் என்ற உத்வேகத்தை தென்இந்திய மக்களிடம் ஏற்படுத்தியது.

தேசத்தின் மீது அக்கறை கொண்ட, நீதியை நிலை நாட்ட விரும்புகின்ற ஒவ்வொரு இந்திய குடிமக்களையும் இம்மாநாட்டிற்கு வரும்படி அன்போடு அழைக்கின்றோம். மாநாட்டின் செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்குமாறு ஊடகத்துறை நண்பர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.


பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது கலந்து கொண்ட பாபுலர் ஃப்ரண்டின் தலைவர்ள் விபரம் வருமாறு:

இ.எம். அப்துர் ரஹ்மான் (தேசிய தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட்)
கே.எம். ஷரீஃப் (தேசிய பொதுச்செய்லாளர், பாப்புலர் ஃப்ரண்ட்)
முஹம்மது அலி ஜின்னா (மாநாட்டு ஒருங்கினைப்பாளர், சமூக நீதி மாநாடு)
முஹம்மது ஷாஃபி (மாநாட்டு ஒருங்கினைப்பாளர் குழு உறுப்பினர்)
அனீஸ் அஹமது (ஊடக தொடர்பாளர்)

"டேம் 999 தரும் பாடம்" தமிழ்நாடு தமிழர்களுக்கே!

முல்லைப் பெரியாறு அணையை மையமாக வைத்து, அணை உடைவது போன்று தயாரிக்கப்பட்ட  படமே  "டேம் 999".

இந்த அணையை உடைத்து விட்டு வேறு தாழ்வான பகுதியில் அணையை கட்டி தமிழகத்துக்கு வரும் நீரை தடுப்பதே கேரளா அரசின் திட்டம்.


முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வரும் நீரால் தமிழகத்தில் 13 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு நீர்ப்பாசனம் கிடைக்கிறது.  இந்த அணையை எப்படியாவது உடைக்க வேண்டும் என்பதற்காக கேரள அரசு பல சூழ்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

அணையை உடைக்க வேண்டிய தேவையில்லை என்றும் அந்த ஆணை பாதுகாப்பானதாகவே இருக்கிறது என்றும்  நிபுணர்கள் குழு அறிக்கைகள் தெரிவித்த பின்னரும் கேரளம் வேண்டும் என்றே இதில் பிடிவாதம் காட்டி வருகிறது.
அணை உடைவதைப் போல் காண்பிக்கும் இந்த படத்தினை திரையிடக்கூடாது என்று தமிழகத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது. 

இந்தப் படம் இந்தியாவில் வெள்ளிக்கிழமை வெளியிடத் திட்டமிடப் பட்டுள்ளது. 
இந்நிலையில் இப்படத்தை  தமிழகத்தில் திரையிட மாட்டோம் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சிந்திக்கவும்:
எங்கே போனார்கள் நம் போலி தேசபக்தி வடவர்கள். ஏன்யா! தமிழ் நாட்டு மின்சாரம் கேரளாவுக்கு வேண்டும், தமிழ் நாட்டு அரிசி, மீனு, காய்கறி வேண்டும் தண்ணி மட்டும் கொடுக்க மாட்டே! தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் "கேரளத்து நாயரு டீக்கடை" நீ பிழைக்க தமிழன் வேண்டும் ஆனால் தண்ணி கொடுக்க மாட்டே.

கர்நாடகக்காரனுக்கு நம்ம மின்சாரம் வேண்டும், நம்ம உணவு பொருள் எல்லாம் வேண்டும் ஆனால் தண்ணி மட்டும் தரமாட்டான்.
வீணா தண்ணிய கடலுக்கு திறந்து விட்டாலும் விடுவானே தவிர தமிழனுக்கு தரமாட்டான். இந்தியாவுடன் இருப்பதால் தமிழகத்துக்கு எந்த நன்மையையும் இல்லை. நம்மை சுரண்டி பக்கத்து மாநிலத்துகாரனுக்கு கொடுப்பான் இந்த வடநாட்டு ஆட்சிகாரன்.

அதனாலேயே கேட்கிறோம் தமிழர்களுக்கு என்று "தனி நாடு" வேண்டும் என்று. தமிழகத்தில் எல்லா வளமும் இருக்கிறது.
நம் மக்களுக்கு தேவையானதை நாமே நிறைவேற்றி கொள்ள முடியும். இதை எல்லாம் நாம் சொன்னால் இந்திய தேசபக்தி அடிமைகளுக்கு பொறுக்காது. இந்தியாவை விட்டு தமிழகம் பிறியும் காலம் வந்து விட்டது. அந்த காலம் வெகு தூரத்தில் இல்லை. தமிழா ஒன்று படு! தமிழ் நாடு தமிழர்களுக்கே என்று சொல்லு!!
ரௌத்திரம் பழகு 
...யாழினி...

Thursday, November 24, 2011

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்

கைதிகளை பரிமாறிக்கொள்வது உள்பட இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் இன்று இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றன.

இரு நாடுகளிடையேயான கைதிகள் பரிமாற்றம், பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய ஒப்பந்தங்களில் யு.ஏ.இயின் துணை பிரதமரும், உள்துறை அமைச்சருமான ஷேக் ஸைஃப் பின் ஸாயித் அல் நஹ்யானும், இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கையெழுத்திடுவார்கள் என யு.ஏ.இயில் இந்திய தூதரக அதிகாரி எ.கே.லோகேஷ் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 1200 இந்திய கைதிகள் யு.ஏ.இ சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் இவர்களுக்கு ஆறுதல் அளிக்கும். இந்த ஒப்பந்தத்தின்படி சிறைத் தண்டனையை அனுபவிப்பவர்கள் மீதமுள்ள காலத்தை இந்திய சிறைகளில் பூர்த்தி செய்யலாம். ஆனால் விசாரணை கைதிகளுக்கு இது பொருந்தாது.

அமீர் சுல்தானை விடுதலை செய்யக்கோரி நடைபெற்ற கையெழுத்து இயக்கம்

கடந்த வெள்ளிக்கிழமை அன்று மண்ணடியில் எஸ்.டி.பி.ஐயினுடைய துறைமுகம் தொகுதி தலைவர் எஸ்.அமீர் சுல்தானை விடுதலை செய்ய வேண்டி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கையெழுத்திட்டு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.




எஸ்.டி.பி.ஐயின் சென்னை துறைமுக தொகுதி தலைவராக செயல்பட்டு வந்தவர் அமீர் சுல்தான். நல்ல துடிப்பும், சுறுசுறுப்புள்ள இளைஞராக திகழ்ந்த அவர் தனது பகுதியில் பல சமூக சேவைகளை செய்துவந்தார். அதன் அடிப்படையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் 60வது வார்டில் போட்டியிட்டு ஆயிரத்து இருநூறு வாக்குகள் மேல் பெற்று அதிமுக, திமுக போன்ற கட்சிகளின் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

அரசியல் காழ்புணர்ச்சி கொண்டவர்கள் காவல்துறையினரின் துணையோடு அவர் மீது பொய்வழக்கு போட்டு கைது செய்தது. இதன் பின்னர் அமீர் சுல்தான் ஈடுபடாத இன்னும் பல வழக்குகளை அவர் மீது திணித்து தற்போது குண்டர் சட்டத்தில் பதிவு செய்துள்ளது.

இதனை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ யின் தலைமை ஜனநாயக ரீதியிலும், சட்ட ரீதியிலும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே சமயம் பொதுமக்களின் ஆதரவை பெற வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மண்ணடியில் அவர் போட்டியிட்ட 60வது வார்டிற்கு உட்பட்ட மஸ்ஜிதுகளில் ஜும்மா தொழுகைக்கு பிறகு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஒவ்வொரு மஸ்ஜிதுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அமீர் சுல்தானின் விடுதலைக்காக தங்களது ஆதரவை கையெழுத்திட்டு தெரிவித்தனர்.

அமீர் சுல்தானின் விடுதலைக்காக சட்ட ரீதியான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். வெகுவிரைவிலேயே அவர் விடுதலை அடைவார் என்றும் அதன் பின்னர் அவர்கள் முன்பை விட அதிக சேவைகளில் ஈடுபடுவார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Wednesday, November 23, 2011

டெல்லியில் நடைபெற்ற பிரச்சார காட்சிகள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தேசிய அளவில் வருகின்ற 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேசத்தின் தலைநகரான புதுடெல்லியில் ராம்லீலா மைதானத்தில் மாபெரும் "சமூக நீதி மாநாடு" நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் நடைபெற்றது. தலைநகரின் பல பகுதிகளில் ஒவ்வொரு நபரையும் சந்தித்து சமூக நீதிக்கான பிரச்சாரங்கள், மற்றும் மாநாட்டின் செய்திகள் கொண்டு சேர்கப்பட்டது. அதன் புகைப்பட காட்சிகள் இதோ!